அந்த நடிகை விஜய் கட்சியில் இணைகிறாரா? பரபரக்கும் கோலிவுட்..!

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜன் அரசியல் ஆசை வெளிப்படை: விஜய் கட்சியில் இணைவாரா?

HIGHLIGHTS

அந்த நடிகை விஜய் கட்சியில் இணைகிறாரா? பரபரக்கும் கோலிவுட்..!
X

நடிகை வாணி போஜன், விஜய் தொடங்கிய "தமிழக வெற்றி கழகம்" கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்களம் வெப் சீரிஸில் நடித்த போது தனக்கு அரசியல் ஆசை இருந்ததாகவும், விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று சொல்ல முடியாது.இப்போது இருக்கும் சூழலில் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்துவதே தனது நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார் .

செங்களம் வெப் சீரிஸில் அரசியல் கதாபாத்திரம்

சமீபத்தில் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட வாணி போஜனிடம், விஜய்யின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "செங்களம் வெப் சீரிஸில் நான் ஒரு அரசியல்வாதியாக நடித்தேன். அப்போது எனக்கு அரசியல் ஆசை இருந்தது. இப்போதும் அந்த ஆசை இருக்கிறது. விரைவில் அரசியலுக்கு வருவேனா என்பது தெரியவில்லை." என்று கூறினார். தான் அரசியலுக்கு வரவில்லை என்றாலும் விஜய்க்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று கூறியுள்ள நிலையில், அவருக்கு விஜய் ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

விஜய் தனது கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே இந்த முடிவை எடுத்திருப்பது மிகவும் துணிச்சலான விசயம். மேலும் விஜய் மக்கள் பணி செய்யும் முடிவை சீக்கிரமாகவே எடுத்தது நல்ல விசயம் இன்னும் 40 ஆண்டுகளுக்கு அவரால் மக்கள் பணி செய்யமுடியும் என்றும் பொதுமக்கள் பலர் பாராட்டுகின்றனர். வாணி போஜனின் பேட்டி இளைஞர்களிடம் முக்கியமாக இளம் பெண்களிடம் விஜய்க்கு இருக்கும் வரவேற்பை எடுத்து காட்டுகிறது.

விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமா?

"அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். என்னை பொறுத்தவரை, நடிகர் விஜய்க்கு அரசியலில் மக்கள் ஒருமுறை வாய்ப்பு கொடுக்கலாம். அப்போதுதான் அவர் மக்களுக்காக என்ன செய்கிறார் என்பதும், விஜய் அரசியலின் நோக்கம் என்ன என்பதும் நமக்கு தெரிய வரும்." என்று வாணி போஜன் மேலும் கூறினார். வாய்ப்பு கிடைக்கும்போதுதான் யாராக இருந்தாலும் அவர்களின் நோக்கமும் மக்களுக்கு என்ன செய்ய போகிறார்கள் என்பதும் தெரியவரும் என்பதே மக்களின் கருத்தாகவும் இருக்கிறது.

வாணி போஜன் - விஜய் இணைப்பு

வாணி போஜன் வெளிப்படையாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது, அவர் "தமிழக வெற்றி கழகம்" கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக யூகிக்கப்படுகிறது.

வாணி போஜன் - சின்னத்திரை நயன்தாரா

2012 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆஹா" சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான வாணி போஜன், "தெய்வ மகள்" சீரியல் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். "சின்னத்திரை நயன்தாரா" என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், 2020 ஆம் ஆண்டு "ஓ மை கடவுளே" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

வாணி போஜனின் திரைப்பட பயணம்

"லாக் அப்", "மலேசியா டூ அம்னீசியா", "ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்", "மிரள்", "பாயும் ஒளி நீ எனக்கு", "லவ்" போன்ற படங்களில் நடித்துள்ளார். "பகைவனுக்கு அருள்வாய்", "கேசினோ", "ஆர்யன்" போன்ற படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. "ட்ர்பிள்ஸ்", "தமிழ் ராக்கர்ஸ்", "செங்களம்" போன்ற வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார்.

வாணி போஜன் அரசியலுக்கு வருவது தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 Feb 2024 4:15 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  Variation Of Apartment And Individual House தனி வீடுகளுக்கும்...
 2. லைஃப்ஸ்டைல்
  Preparation Of Vegetable Briyani சுவையான வெஜிடபுள் பிரியாணி செய்வது...
 3. டாக்டர் சார்
  Reason For Diabetis And Precaution சர்க்கரை நோயை முற்றிலும்...
 4. உலகம்
  உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் மூன்று இந்தியர்கள்
 5. தாராபுரம்
  தாராபுரத்தில் கலெக்டர் ஆய்வு
 6. உலகம்
  போர் பயிற்சிக்காக மாலத்தீவிற்கு விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்
 7. டாக்டர் சார்
  Health Benefits Of Papaya ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்...
 8. உடுமலைப்பேட்டை
  குப்பைக்கு தீ வைப்பதாக உடுமலை நகா்மன்ற கூட்டத்தில் புகாா்
 9. லைஃப்ஸ்டைல்
  வாழ்க்கையை மாற்றிக் காட்டும் சில தத்துவங்கள் - என்னவென்று...
 10. இந்தியா
  விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி...