பிரபல நடிகருடன் எமி ஜாக்சனுக்கு 2வது திருமணம்..! கலந்து கொண்ட தமிழ் இயக்குநர்!

பிரபல நடிகருடன் எமி ஜாக்சனுக்கு 2வது திருமணம்..! கலந்து கொண்ட தமிழ் இயக்குநர்!
X
பிரபல நடிகருடன் எமி ஜாக்சனுக்கு 2வது திருமணம்..! கலந்து கொண்ட தமிழ் இயக்குநர்!

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தில் ஆர்யா ஜோடியாக அவர் நடித்திருப்பார்.

முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தவர் அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றார். தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0, மிஷன் சாப்டர் 1 என பல படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு நீண்ட நாள் காதலனோடு திருமணம் நடந்து முடிந்தது.

ஜார்ஜூடன் என்பவரைக் காதலிக்கும்போதே குழந்தைக்கு தாயான எமி, தற்போது கருத்து வேறுபாட்டால் முதல் கணவரை பிரிந்துவிட்டார். இந்நிலையில், பிரபல நடிகர் ஒருவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் சில மாதங்களாக காதலித்து வரும் வேளையில், இப்போது திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டையும் செய்தனர்.

அந்த நடிகர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். எட்வர்டு வெஸ்ட்விக் எனும் அந்த நடிகரை கரம்பிடித்துள்ளார் எமி ஜாக்சன். இத்தாலியில் அமல்ஹி எனும் கடற்கரை பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழ் சினிமா இயக்குநர் ஏ எல் விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

Tags

Next Story
ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிட கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்