அம்ரிதா ஐயரின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்: சமூக வலைத்தளங்களில் வைரல்

அமிர்தா ஐயர்.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் பிறந்த அம்ரிதா ஐயர், திரையுலகில் ஆர்வம் கொண்டு மாடலிங் துறையில் பணியாற்றி வந்துள்ளார். பெங்களூரில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுரியில் தனது இளங்கலை பட்டத்தினை பெற்றுள்ள இவர், ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு தனது தோழிகளுடன் மாடலிங் துறையிலும் பங்குபெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அம்ரிதா ஐயர் தமிழில் 2016ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற விஜய்யின் தெறி திரைப்படத்தில் யாரும் குறிப்பிடப்படாத ஒரு கௌரவ தோற்றத்தில் தோன்றி திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தினைத் தொடர்ந்து இவர், 2018-ம் ஆண்டு வெளியான படைவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் திரையுலகின் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
இவர் படைவீரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்ததற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான பட்டியலில் பல திரைத்துறை சார்ந்த விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பின்னர் அதே ஆண்டு காளி திரைப்படத்தில் நடிகர் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக தேன்மொழி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சில திரைப்படங்களில் நடித்து தமிழில் ஒரு நாயகியாக அறிமுகமாகினாலும் இவரது திரைவாழ்வில் 2019-ம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு பிரபலமானது. இதனைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் பிரபலமான இவர் கன்னடம் மற்றும் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகி பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி அழகான சேலையில் புத்தாண்டை கொண்டாடிய அமிர்தா ஐயரின் போட்டோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu