அக்கட தேசத்திலும் அற்புத வரவேற்பு... 'மரோசரித்ரா' போன்றே 'விக்ரமு'க்கும்..!

அக்கட தேசத்திலும் அற்புத வரவேற்பு... மரோசரித்ரா போன்றே விக்ரமுக்கும்..!
X

விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசன் தோன்றும் ஒரு காட்சி.

'விக்ரம்' படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துவிட்டு கருத்து பகிர்ந்தார் நடிகர் கமல்ஹாசன்.

விக்ரம்' படத்துக்கு முதல்நாள் கிடைத்த வரவேற்பும் முத்தாய்ப்பான கமல் ரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டமும் இன்னமும் குறையவில்லை.

இதற்கிடையே, முதல்நாள் இரவு ரசிகர்களுடன் சேர்ந்து, படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அதன் பின்பு செய்தியாளர்களிடம், " 'விக்ரம்' படத்தை இத்தனை தூரம் கொண்டு சேர்த்த அனைவருக்கும் நன்றி. ரசிகர்களுடன் உட்கார்ந்து படம் பார்ப்பது என்பது விருதுகளைவிட மிகப் பெரிது. ஷூட்டிங்கின்போதே, எந்தெந்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோமோ, அந்தந்த இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ரசித்தார்கள் என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

மேலும், விக்ரம் படத்துக்கான வரவேற்பு பிரமாதமாக உள்ளது. தெலுங்கில் 'மரோசரித்ரா' முதன்முதலில் ரிலீஸ் ஆனபோது எந்த மாதிரியான பாராட்டுகள் எனக்கு கிடைத்ததோ, அதில் கொஞ்சமும் குறையாமல் அதேமாதிரியான பாராட்டு இப்போதும் ஆந்திராவில் கிடைத்துள்ளது.

தமிழகத்திலும், மும்பையிலும் அதேபோன்று எதிர்பார்ப்புகள் இருந்தன. வெளிநாடுகளைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 2000 பிரிண்டுகள் ரிலீசாகி உள்ளன. இம்மாதிரியான ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததே இல்லை" என்று பெருமிதத்துடன் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!