தமிழ் திரையலகின் அற்புத நடிகர் டி. எஸ். பாலையா காலமான நாளின்று

தமிழ் திரையலகின் அற்புத நடிகர் டி. எஸ். பாலையா காலமான நாளின்று
X

 டி. எஸ். பாலையா 

நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், என தனது இயல்பான அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா.

குணச்சித்திரம், நகைச்சுவை, நயவஞ்சகம், பாமரத்தனம், மேதாவித்தனம், ஏழ்மை, பணக்காரத்தனம் போன்ற எந்தக் கதாபாத்திரமானாலும் தன்னுடைய இயல்பான அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் திக்குமுக்காடச் செய்தவர் டி.எஸ்.பாலையா.


திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன. தந்தை பெயர் சுப்பிரமணிய பிள்ளை. இளம் வயதிலேயே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தார். பல நாடக கம்பெனிகளில் சேர்ந்து, பல்வேறு வேடங் களில் நடித்து, சிறந்த நடிகராக உருவானார்

எஸ்.வி.ரங்கராவ்.எம்.ஆர்.ராதா,எஸ்.வி.சுப்பையா, டி.எஸ்.பாலையா என தமிழ் சினிமா உலகமே வியக்கும் அளவு நடிகர்கள் நிறைந்த காலம் அது.அற்புதமான கலைஞர்கள் அவர்கள்.அதிலும் ராதாவும்,பாலையாவும் வில்லனாகவும்.. .நகைச்சுவையிலும் கொடிகட்டி பறந்தவர்கள். பாலையா...1935 ஆம் ஆண்டு சதி லீலாவதி என்ற படத்தில் அறிமுகமானார். இவர் கதானாயகனாக நடித்த படம்'வெறும் பேச்சல்ல"

பின்..வில்லன் பாத்திரங்களும்..நகைச்சுவை பாத்திரங்களுமே இவரைத் தேடி வந்தன.மணமகள் படத்தில் பத்மினிக்கு பாட்டு வாத்தியாராக வந்து..'சின்னஞ்சிறு கிளியே' பாடலை அழுதுக் கொண்டே பாடி..தன் காதலைத் தெரிவிக்கும் காட்சியில்..அவர் அழுது அற்புதமாக நடிக்கும் போது...நாம் அடக்கமுடியாமல் சிரிப்போம். தூக்கு தூக்கி படத்தில்...சேட்ஜியாக வந்து...நம்மள்...நிம்மல் என தமிழ் பேசி அட்டகாசமாக நடிப்பார்.இதற்குப் பின்னரே..இந்த சேட்டுத் தமிழ் படங்களிலும்...நாடகங்களிலும் பேசப்பட்டது எனலாம்.

பின்...வேலைக்காரி,மதுரை வீரன்,புதுமைப்பித்தன்,தாய்க்குப்பின் தாரம்,அன்பு, காத்தவராயன் என பல படங்களிலும் அவர் நடித்தார். கே.ஆர்.ராமசாமி,டி.ஆர்.மஹாலிங்கம்,ஜெமினி,எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஜி.ஆர்.,சிவாஜி என அனைத்து நடிகர்களுடன் நடித்தவர். பாகப்பிரிவினையில்..இவர் குணச்சித்திர நடிப்பு பாராட்டப்பட்டது. பாமா விஜயம் காமெடி தூள் கிளப்பி இருப்பார்..இவரைப் பற்றி எழுதும் போது...நம்மால் மறக்கமுடியாத இரண்டு படங்கள்..காதலிக்க நேரமில்லை, தில்லானா மோகனாம்பாள். தி.மோ.வில் தவில் கலைஞராக வந்து..ரயிலில்..சி.கே.சரஸ்வதியுடன் இவர் செய்யும் குறும்புகள்..


காதலிக்க நேரமில்லை படத்தில்...நாகேஷுடன் இவர் கதைக் கேட்கும் காட்சி..சிரித்து..சிரித்து..வயிறு புண்ணாகும் காட்சியாகும். திருவிளையாடலில்...ஹேமாநாத பாகவதராய் வந்து..அலட்சியத்துடன்...இவர் பாடும் "ஒரு நாள் போதுமா" இன்றும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

பாலையாவுக்கு நல்ல குரல் வளம் உண்டு. ஆரம்பகாலத்தில், பல படங்களில் அவர் சொந்தக்குரலில் பாடியுள்ளார். ''பிரசன்னா'' விலும் ஒரு மலையாளப்பாடலை சொந்தக் குரலில் பாடினார்.

டி.எஸ்.பாலையா..என்ற அற்புதநடிகர்..1976 ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 22) காலமானார்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself