பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க மறுத்த அமலா பால்

நடிகை அமலா பால் (பைல் படம்)
Amala paul refused to act in ponniyin selvan movie-மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படத்தில் ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர் என்பதும் இந்த படம் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Amala paul refused to act in ponniyin selvan movie-இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க மணிரத்னம் அமலாபாலை கேட்டதாகவும், ஆனால் அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாபால் கூறியபோது மணிரத்னம் அவர்களின் மிகப்பெரிய ரசிகையாகிய நான் ஏற்கனவே ஒருமுறை அவரது படத்தில் நடிக்க ஆடிஷனுக்கு சென்று இருந்தேன். ஆனால் அப்போது தேர்வாகவில்லை.
இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஒரு கேரக்டருக்கான என்னை அழைத்தனர். ஆனால் மணிரத்னம் கூறிய அந்த கேரக்டரில் நடிக்கும் மனநிலையில் நான் இல்லை என்பதால் நடிக்க மறுத்து விட்டேன், அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை என்று கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu