அஜித் ரசிகர்களே..! 6.31க்கு அப்படி என்ன அப்டேட்..?

அஜித் ரசிகர்களே..! 6.31க்கு அப்படி என்ன அப்டேட்..?
X
அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் ட்வீட் ஒன்று ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'AK63' படத்தின் அப்டேட்டை நோக்கியா அல்லது 'விடாமுயற்சி'யின் அடுத்தகட்ட அறிவிப்பை நோக்கியா

இன்னைக்கு வர இருப்பது விடாமுயற்சி அப்டே்டா அல்லது அஜித்குமாரின் அடுத்த பட அப்டேட்டா என ரசிகர்கள் உற்சாகத்திலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். இதனிடையே 6.31 மணிக்கு அப்டேட் வெளியாகும் என்பதை சிம்பாளிக்காக குறிப்பிட்டுள்ளார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா.

அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் ட்வீட் ஒன்று ரசிகர்களை உற்சாகத்தில் துள்ள வைத்துள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு 'AK63' படத்தின் அப்டேட்டை நோக்கியா அல்லது 'விடாமுயற்சி'யின் அடுத்தகட்ட அறிவிப்பை நோக்கியா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக வேறு படத்தில் அஜித் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

'AK63' போஸ்டர் வடிவமைத்தது யார்?

'AK63' திரைப்படத்தின் போஸ்டரை வடிவமைக்கும் பொறுப்பு டியூனி ஜான் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'பேட்ட', 'புஷ்பா', 'கேப்டன் மில்லர்' போன்ற வெற்றித் திரைப்படங்களுக்கு போஸ்டர் வடிவமைத்த அனுபவம் இவருக்கு உள்ளது. அஜித் குமாரின் படத்திற்கு அவர் எப்படிப்பட்ட கலைநயம் ஊட்டுகிறார் என்பதை ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

செய்தியாக வந்தது என்ன?

'AK63' திரைப்படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்பதும் தற்போது அரசல் புரசலாக வெளிவந்த தகவலாக இருக்கிறது. இன்னும் சற்று நேரத்தில் அவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுமா என்பதையும் பொறுத்திருந்து காண்போம்.

'விடாமுயற்சி' என்னாச்சு?

'விடாமுயற்சி' படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 'வேட்டையன்' (ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம்) படப்பிடிப்புக்குப் பிறகு தான் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அஜித் குமார் ரசிகர்களுக்கு தற்போதைக்கு அவரின் அடுத்த திரைப்படமான 'AK63' மீது தான் கவனம் செல்லும்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் படம் விடாமுயற்சி. இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் மீண்டும் திரிஷா, அர்ஜூன் ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ஆரவ் நடித்து வருகிறார். இவர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்த, அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த படப்பிடிப்பு அவ்வப்போது பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கப்படுவதாக இருந்தது. அப்படி இம்முறை பணப்புழக்கம் காரணமாக லைகா இந்த படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளது.

திருப்தியான தகவலா?

பொதுவாக திரைப்பிரபலங்களின் மேலாளர்கள், வழக்கமான தகவல் பரிமாற்றத்திற்கே ட்விட்டரை பெரிதும் பயன்படுத்துவர். சுரேஷ் சந்திராவின் இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதை பலரது பதில் ட்வீட்கள் மூலம் அறியமுடிகிறது. அடுத்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவாக இருக்கும் என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம்

'AK63' அறிவிப்பா, 'விடாமுயற்சி' அறிவிப்பா அல்லது வேறு ஏதேனும் சர்ப்ரைஸா – என்னவென்று சுரேஷ் சந்திராவின் அடுத்த ட்வீட் மூலம் தெரியவரும். 'AK' ரசிகர்கள், உற்சாகம் தணியாமல் காத்திருங்கள்!

அஜித்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியான தகவலாகிவிட்ட நிலையில், இந்த படத்தில் அஜித் ஜோடியாக யார் நடிப்பார் என்பது விவாதப் பொருளாகியுள்ளது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!