‘ஏகே 62’ படப்பிடிப்பு மே மாதம் துவக்கம்?

‘ஏகே 62’  படப்பிடிப்பு மே மாதம் துவக்கம்?
X

பைல் படம்.

லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் மே மாதம் முதல் ‘ஏகே 62’ படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர் அஜித். அதிக ரசிகர்களை கொண்டுள்ள இவர் அண்மையில் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் துணிவு என்ற திரைப்படதில் நடித்திருந்தார். இப்படம் ஜன.11-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதனையடுத்து, லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. பின்னர் சில பிரச்னைகளால் இந்தப் படத்திலிருந்து அஜித் விலகுவதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவியது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ‘ஏகே 62’ பற்றிய தகவலை நீக்கினார். இதனால் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவில்லை என்பது உறுதியானது.

இதன்பிறகு கலகத்தலைவன் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் அஜித் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியது . பின்னர் ‘ஏகே 62’ படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதியானதை அடுத்து, படத்திற்கான பூஜைகளும் நடந்து முடிந்துளளது. பட பூஜையில் படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள், படக்குழுவினர் என அனைவரும் கலந்து கொண்ட நிலையில் அஜித் மட்டும் கலந்து கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க நடிகர்கள் அருண் விஜய் மற்றும் அருள்நிதி ஆகியோருடன் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல் இப்படத்திற்கு முதலில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அனிருத் ஏகே 62 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஏகே 62 ஸ்பை திரில்லர் ஜானரில் பிரம்மாண்டமாக இயக்குநர் உருவாகவுள்ளதாகவும், அஜித் இதுவரை தோன்றிடாத புதிய கதாபாத்திரத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் அஜீத்தின் தந்தை மறைவால் ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ஏகே 62 படத்தின் நல்ல செய்தி அடுத்த மாதம் வருமென்று கூறப்படுகிறது. இதையடுத்து மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் படப்படிப்பை முடித்ததும் தனது உலக பைக் சுற்றுப்பயணத்தை அஜீத்குமார் தொடங்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!