அஜீத் படத்துக்கு இசை அமைக்கிறார் ஜிப்ரான்..

AK61 Music Director
AK61 Music Director-அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இணைந்துள்ளார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் திட்டம், இரு ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.
இந்த படத்தின் பூஜை கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று, காலை 9.01 க்கு ஐத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார்.

இந்த படத்திற்காக 47 நாட்கள் இடைவிடாது தொடர்ச்சியாக, ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தினர். முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ம் தேதி முதல் சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'சார்பட்டா பரம்பரை' படத்தில் 'வேம்புலி' கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார் என அதிகாரப்பூர்வமாக போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்ரான் ஏற்கனவே எச். வினோத் உடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu