வேள்பாரியில் அஜித்..! சூர்யாவும் இருக்காராமே? என்னங்க சொல்றீங்க?

வேள்பாரியில் அஜித்..! சூர்யாவும் இருக்காராமே? என்னங்க சொல்றீங்க?
X
இந்த படத்தில் சூர்யாதான் நாயகனாக வேள்பாரியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கம்போல இந்த படத்திலிருந்தும் அவர் நடிப்பாரா என்பது சந்தேகம்தான்

மதுரை எம்பியாக இருக்கும் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் தற்போது படமாக இருக்கிறது. இதில் நடிக்க சூர்யாவிடம பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வீரயுகநாயகன் வேள்பாரி என்ற வரலாற்று புனைவு நாவலை இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் அதற்கான பணிகள் துவங்கும் எனவும் தகவல் வெளியாகியிருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த தகவல் வெளியாகியிருந்த நிலையில், அதன்பிறகு இதுகுறித்த எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது.

இந்த படத்தில் சூர்யாதான் நாயகனாக வேள்பாரியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வழக்கம்போல இந்த படத்திலிருந்தும் அவர் நடிப்பாரா என்பது சந்தேகம்தான் என்று இப்போது கூறப்படுகிறது.

பறம்பு மலையை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி, கடையேழு வள்ளல்களில் ஒருவர். இவரின் கதையைதான் தற்போது இயக்குநர் ஷங்கர் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறார். சூர்யாவிடம் இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்த நிலையில், தற்போது இந்த படத்தில் வேள்பாரி கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க திட்டம் இருப்பதாக தெரிகிறது.

பெரும் பொருட்செலவில் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், தனுஷும் இந்த படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதில் உண்மையில்லை என்று கூறப்படுகிறது.

அதேநேரம் ஷங்கர் சமீபத்தில் நடிகர் அஜித்தை சந்தித்து சில விசயங்களை விவாதித்தாகவும் கூறப்படுகிறது. அநேகமாக அது வேள்பாரி படத்துக்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை என்று கூறப்படுகிறது. காரணம் சூர்யா இப்போது பாலிவுட் படங்களை நாடி சென்றுவிட்டார் என்று கூறப்படும் நிலையில், அவரது வணங்கான், வாடிவாசல், புறநானூறு ஆகிய மூன்று படங்கள் வரிசையாக டிராப் ஆகி வருகின்றன என்கிற செய்தி ஷங்கர் காதையும் எட்டியுள்ளது.

இதனால் சூர்யாவை வைத்து இந்த படத்தை எடுத்தால் பெரிய பிசினஸ் செய்ய முடியாமல் போய்விடக்கூடும் என்றும், அஜித்தான் இந்த படத்துக்கு சிறந்த தேர்வாக இருப்பதாக ஷங்கர் நம்புவதாகவும் கூறப்படுகிறது.

அஜித்தும் இப்போது மீண்டும் இதுபோன்ற படங்களில் கலவையாக நடிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு போவதால், அந்த இடம் வெற்றிடமாக இருக்கும் நிலையில், பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பதன் மூலம் மார்க்கெட்டை மேலும் விரிவடையச் செய்யலாம் என அஜித் நம்புகிறாராம். இதனால்தான் அஜித், ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

அதேநேரம் அவர் வேள்பாரி கதையில்தான் நடிக்கப்போகிறாரா அல்லது வேறு கதையைக் கேட்க இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அஜித் ஸ்டைலாக ஒரு படத்தில் நடிக்கவும் விரும்புவதாக கூறப்படுகிறது. அந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாகவும், அந்த படத்தைத் தொடர்ந்துதான் ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வேள்பாரி படத்தை மூன்று பாகங்களாக எடுக்க இருப்பதாகவும், முதல் பாகத்தை 2025 ஆம் ஆண்டு முடிவில் திரைக்கு கொண்டு வரவேண்டும் எனவும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இன்னும் வெளியாகவில்லை. ஷங்கர் இந்தியன் 2 , இந்தியன் 3 படங்களைத் தொடர்ந்து நேரடியாக அந்த படத்துக்குத் தான் செல்வார் என்று தெரிகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!