2023ல் அஜித்தான் டாப்... என்ன விசயம் தெரியுமா?

2023ல் அஜித்தான் டாப்... என்ன விசயம் தெரியுமா?
X
அஜித்குமார் தனது 62 வது படத்தை லைகா நிறுவனத்துக்கு பண்ணுகிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியே வராத நிலையில், கிட்டத்தட்ட இது உறுதியான தகவல்தான் என்று கூறப்படுகிறது.

போனி கபூர் தயாரித்து வினோத் இயக்கத்தில் வெளியான துணிவு படம் இவர்களது கூட்டணியில் அஜித் நடிக்கும் மூன்றாவது திரைப்படமாகும்.

வங்கிக் கொள்ளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த படம் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைந்தது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததன் காரணமாக வசூலும் வேற லெவலுக்கு இருந்தது. 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 220 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்திருந்ததாக கூறுகிறார்கள். ஷேர் மட்டும் இவ்வளவு கிடைத்திருப்பதால் இது மிகப் பெரிய வெற்றிப் படமாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓடிடி தளத்திலும் வெளியிடப்பட்டது துணிவு திரைப்படம். வெளியான நாள் முதல் ஓடிடியிலும் பலத்த வரவேற்பு இருந்தது. சமூக வலைத்தளங்களிலும் துணிவு படத்தைப் பற்றி பல விசயங்களை பகிர்ந்து எழுதினர். இதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தற்போது தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அஜித்தின் துணிவு படம் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது.

துணிவு படத்துக்கு பிறகு வினோத் உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை இயக்குவதில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கார் ஒன்றையும் வாங்கி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அஜித்குமார் தனது 62 வது படத்தை லைகா நிறுவனத்துக்கு பண்ணுகிறார். அந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியே வராத நிலையில், கிட்டத்தட்ட இது உறுதியான தகவல்தான் என்று கூறப்படுகிறது.


முன்னதாக துணிவு படம் ரிலீசுக்கு முன்னரே இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்று பேசப்பட்டது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தது லைகா. திடீரென்று விக்னேஷ் சிவனை படத்திலிருந்து விலக வலியுறுத்தியிருந்தது. அதற்கு காரணம் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளை முழுமை செய்யாமல் அவர் தனது மனைவி நயன்தாராவுடன் உலக சுற்றுலா சென்றதுதான் என்கிறார்கள்.

டிசம்பர் மாதத்துக்குள்ளேயே முடித்திருக்க வேண்டிய ஸ்க்ரிப்டை ஜனவரி தாண்டியும் முடிக்காமல், கேட்கும்போது ஷூட்டிங்கில் பார்த்துக்கலாம் என்று பொறுப்பற்றமுறையில் பதிலளித்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன். இது லைகா தரப்பிலிருந்து ரகசியமாக வெளிவந்த தகவல். இதனால் கோபமடைந்த லைகா தரப்பு அவரை வெளியேறச் சொல்லிவிட்டதாம்.


உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான செண்பகமூர்த்தியின் ஆலோசனையின் பெயரில் மகிழ்திருமேனியிடம் கதை கேட்குமாறு லைகா அஜித்திடம் கேட்டிருக்கிறது. இரண்டு கதைகள் வைத்திருப்பதாகவும் அதில் ஒன்றை ஓகே செய்யுமாறும் கேட்டிருக்கிறார்கள். இரண்டு கதைகளையும் கேட்டுவிட்டு அஜித் இரண்டையும் ஓகே செய்திருக்கிறார். ஒன்றை முடித்துவிட்டு மற்றொன்றையும் முடிக்கலாம் என்று பேச்சில் நம்பிக்கை அளித்திருக்கிறார் அஜித்குமார்.

அஜித்குமார் மாதிரியான நடிகர்கள் நடித்தால் மகிழ்திருமேனிக்கு மிகப் பெரிய புகழ் வெளிச்சம் கிடைக்கும். நல்ல இயக்குநர்களுக்கு அது நிச்சயம் தேவை என்கிறார்கள் ரசிகர்கள்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்