உன் காசு தேவையில்ல... நேரடியாக கூறிய கேப்டன்! கலங்கிய அஜித்.!

உன் காசு தேவையில்ல... நேரடியாக கூறிய கேப்டன்! கலங்கிய அஜித்.!
X
அஜித் கொடுத்த பணத்தை வாங்க மறுத்த விஜயகாந்திடம் அவர் தனது முதுகில் அடிபட்ட காயங்களைக் காட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் முகமான நடிகர் விஜயகாந்த் கடந்த வாரம் மரணமடைந்தார். அனைத்து தமிழ் நடிகர்களும் அவருக்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். சிலர் தங்களது அனுதாபத்தை அவரது குடும்பத்தினருக்கும் தொலைபேசி வழியாக தெரிவித்தனர். இந்நிலையில், அஜித்குமார் மட்டும் வரவில்லை என இணையதளங்களில் செய்தி வெளியானது. அதன்பிறகு சில நிமிடங்களிலேயே அஜித் தொலைபேசி வழியாக தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டதாக விஜயகாந்த் குடும்பத்தினரே தெரிவித்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுத்த வரலாற்று நிகழ்வு 2000 ஆம் ஆண்டு மலேசியாவில் நடந்தது. இதனை முன்னின்று நடத்தியவர் நடிகர் விஜயகாந்த். இந்த விழாவிற்கு நடிகர் சங்க தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த் அனைத்து நட்சத்திரங்களையும் கட்டாயம் வரவேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதுவரை தமிழ் மட்டுமின்றி இந்திய சினிமா வரலாற்றிலேயே நடக்காத ஒரு நிகழ்வாக, இந்த மாபெரும் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருந்தது நடிகர் சங்கம். அப்போதைய முன்னணி நடிகைகள், இருபெரும் ஆளுமைகளான ரஜினி, கமல், மற்ற நடிகர்கள், வளர்ந்து வந்த இளம் நடிகர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த விழாவில் கலந்துகொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், பிரபு, சரத்குமார், பிரபுதேவா, அப்பாஸ், விஜய், சூர்யா என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்துகொண்டனர். விழாவில் கலந்து கொண்டதுடன் மேடையேறி பல நிகழ்ச்சிகளையும் நடத்தி காண்பித்தனர். கடைசியாக ஒரே மேடையில் ரஜினி, கமல் இருவரையும் ஏறச் செய்து அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

மலேசிய தமிழ் சினிமா ரசிகர்கள் பலரையும் நேரடியாக மேடையேறச் செய்து அவர்களிடம் கேள்வி கேட்கும் நிகழ்வும் நடந்தேறியது. விஜய், சூர்யா, அப்பாஸ், பிரபுதேவா, கார்த்திக் என பலரும் நடனம் ஆடி, பாட்டு பாடி தங்கள் திறமைகளைக் காட்டினர். பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் மூவரும் மேடை ஏறி ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடையச் செய்தனர்.

ஆனால், அஜித் மட்டும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. விழா முடிந்து நல்ல வருமானம் கிடைத்ததும், நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்தை அஜித் நேரில் சந்தித்து நடிகர் சங்கத்திற்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என நினைத்தேன். என்னால் நீங்கள் ஒருங்கிணைத்து நடத்திய மலேசியா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்று கூறி, குறிப்பிட்ட தொகை ஒன்றை கொடுத்துள்ளார்.

விழாவில் கலந்துகொள்ளாத அஜித்தின் மீது ஏற்கனவே கடும் கோபத்தில் இருந்த விஜயகாந்த், அஜித் கொடுத்த பணத்தை வாங்கவில்லை. "ஒன்னோட காசு எனக்கு வேண்டாம். நாங்க நினைத்ததை விட அதிகமாக கிடைத்துவிட்டது" என கூறி அஜித் கொடுத்த காசை வாங்க மறுத்துள்ளார் விஜயகாந்த்.

அஜித் எவ்வளவோ பேசியும் விஜயகாந்த் மனம் இறங்கவில்லை. இதனால் விஜயகாந்திடம் தனது முதுகில் இருக்கும் காயங்களை காட்டி இதுதான் காரணம் என கூறியுள்ளார் அஜித்.

அவரது முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷன், அதனால் அவருக்கு ஏற்பட்டுள்ள வலியின் காரணமாக தான் நட்சத்திர விழாவிற்கு வரமுடியவில்லை என தெரிந்ததும் கேப்டன் விஜயகாந்த் கலங்கி அழுதுவிட்டாராம். அஜித் தனது வலியைப் பற்றி விஜயகாந்திடம் கூறியதும், அவர் விசயம் புரிந்து வருத்தப்பட்டுள்ளார். இதன்பின், அஜித் கொடுத்த அந்த பணத்தை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் லைகா தயாரித்து வரும் இந்த படம் பிப்ரவரியில் ஷூட்டிங் நிறைவடைய வேண்டும். ஆனால் கால்ஷீட் தரமாட்டேன் என்று அஜித் சொன்னதால் படப்பிடிப்பு தடைபடும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்