கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் அஜித்..?

கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் அஜித்..?
X
கேஜிஎஃப் இயக்குநருடன் இணையும் அஜித்..?

நடிகர் அஜித்குமார் அடுத்து கேஜிஎஃப் இயக்குநரின் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜூன், ஆரவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை முடித்த பிறகு, அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பெயர் மற்றும் பிற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுடன் வாடிவாசல் படத்தை முடித்துக் கொண்டு அடுத்ததாக அஜித் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், அஜித் தற்போது புதிய வரவாக கே ஜி எஃப் என்ற பிரமாண்ட வெற்றி படத்தை கொடுத்த பிரஷாந்த் நீல்-உடன் கைக்கோர்க்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

இந்த கூட்டணி அமைந்தால், அது தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான கூட்டணியாக இருக்கும். இந்த கூட்டணி மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் படம், உலகம் முழுவதும் ரூ. 1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிரஷாந்த் நீலின் இயக்கத்திறன் மற்றும் கதைக்களம் தான் முக்கிய காரணம்.

அஜித்தின் படங்கள் எப்போதும் வசூல் ரீதியாக வெற்றி பெறும். இந்த கூட்டணியில் அஜித் நடிப்பதால், இந்த படம் ரூ. 1000 கோடி வசூல் ஈட்டுவது உறுதி என்று கூறப்படுகிறது.

இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!