AK62 -ல் அஜித்குமார் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?

Ajith Salary-லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு எத்தனை கோடி சம்பளம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. முதல்முறையாக 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறுகிறார் அஜித்குமார். முன்னதாக துணிவு படத்துக்காக இவருக்கு 95 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
துணிவு படத்துக்கு பிறகு அஜித்குமார் நடிக்கும் ஏகே62 படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் நீக்கப்பட்டிருக்கிறார். பின் அவருக்கு பதிலாக இப்போது அஜித்குமார் 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளிவராத நிலையில், மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில்தான் படத்தின் அறிவிப்பு வெளியாகும் எனவும் அதோடு சேர்ந்து தலைப்பையும் அறிவிக்க இருக்கிறதாம் படக்குழு.
கடந்த சில நாட்களாக அஜித்குமார் தனது மனைவி ஷாலினியுடன் வெளிநாடு சுற்றுலா சென்றிருந்தார். இந்நிலையில் அங்கிருந்த வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் இப்போது அஜித் சென்னை திரும்பியிருக்கிறார். அவர் ரசிகர்களோடு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.
சென்னை திரும்பியுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியிட அவர் தீவிரம் காட்டுவார் என்று கூறப்படுகிறது. ஓரிரு நாளில் இந்த அப்டேட் வெளியாகும் என்றும் அதில் இயக்குநர் மகிழ் திருமேனி, லைகா தமிழ்க்குமரன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்நிலையில் அஜித்குமார் நடிக்கும் 62வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா கன்பார்ஃம் என்கிறார்கள். காரணம் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாவதாக இருந்த கதையில் லைகா தரப்பில் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
லைகா தரப்பிலிருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்படவே, லைகாவுக்கு நெருக்கமாக இருக்கும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் செண்பகமூர்த்தி தங்களுடன் இணைந்து ஏற்கனவே பணிபுரிந்த மகிழ் திருமேனி குறித்து பேசியிருக்கிறார். இதில் இரண்டு கதைகள் விவாதிக்கப்படவே இரண்டையும் அஜித்குமார் தனக்கு பிடித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
முன்னதாக, மகிழ் திருமேனி விஜய்க்கு சொன்ன கதையில் ஆக்ஷன் கதை ஒன்றை அஜித்துக்கு கூற அவர் இன்னும் கொஞ்சம் கூடுதல் ஆக்ஷன் காட்சிகளை சேருங்கள் எனவும் குடும்பங்களுக்கு பிடிக்கும் வகையில் செண்டிமெண்ட் காட்சிகளை கூடுதல் அழுத்தமாக மாற்றவும் கேட்டிருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால், அதில் உண்மை இல்லையாம். படப்பிடிப்பை உடனே துவங்கி உடனே முடித்து 3 மாதங்களுக்குள் அஜித்தை விடுவிக்கவேண்டும் என கண்டிசன் போட்டதால்தான் இழுபறியாம்.
முதல் கதை ஒரு ஸ்பை திரில்லர் படமாக இருக்கிறது. அந்த கதையை கையிலெடுத்தால் நாம் பல மாதங்கள் செலவிட வேண்டி வரும் என்கிறாராம். அது இல்லை என்றால் ஒரு குடும்பங்கள் கொண்டாடும் கதை ஆக்ஷன் திரில்லர் படமாக எடுக்க வாய்ப்புள்ள கதை இருக்கிறதாம். ஆனால் அதையும் தரப்பட்ட நாட்களுக்குள் முடிப்பது சாத்தியமில்லை என கூறப்படுகிறது. இதனால்தான் என்ன பண்ணலாம் என அஜித்திடமே கேட்டுவிட்டு முடிவெடுக்க காத்திருக்கிறது லைகா தரப்பு.
இந்நிலையில், இந்த படத்துக்காக முதல்முறையாக அஜித்துக்கு 115 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டுள்ளதாம். இதனால் முதல் முறையாக 100 கோடிகளைக் கடந்து சம்பளம் வாங்கியிருக்கிறார் அஜித்குமார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu