அஜித்குமார் சம்பளம் 100 கோடியாம்! பெரிய அளவில் திட்டமிடப்படும் AK62!

நடிகர் அஜித் புகைப்படம்
அஜித்குமார் 62 படத்தை யார் இயக்கப் போகிறார் என்பதே இன்னும் தெரியாத நிலையில், இந்த படத்தில் அஜித்குமார் சம்பளம் 100 கோடி என பேசப்பட்டு வருகிறது. முன்னதாக வலிமை படத்துக்காக 70 கோடியும் துணிவு படத்துக்காக 80 கோடியும் வாங்கினாராம்.
ஹெச் வினோத் இயக்கத்தில் வரிசையாக 3 படங்களில் அடுத்தடுத்து நடித்து கொடுத்தார் அஜித்குமார். இந்த படங்களை போனி கபூர் தயாரித்தார். நேர் கொண்ட பார்வை நல்ல கண்டென்ட் இருக்கும் படமாக இருந்தாலும் கலவையான விமர்சனத்தையே பெற்றது. வலிமை படம் அதிக நாள் தயாரிப்பில் இருந்ததால் அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து படம் வெளியாகும்போது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போய்விட்டது.
இந்நிலையில், துணிவு படம் கடந்த பொங்கலுக்கு வெளியானது. அநேக மக்களால் ரசிக்கப்பட்ட இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல கலெக்ஷன்களை அள்ளியது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் அஜித்குமார் அடுத்த படத்துக்கான சம்பளத்தை உயர்த்திவிட்டார் என்று கூறுகிறார்கள். 90 முதல் 100 கோடி ரூபாய் படத்துக்கு சம்பளமாக கேட்கிறாராம். சொல்லப்போனால் அவர் கேட்பதற்குள் லைகா நிறுவனமே இதனை கொடுக்க முன்வந்துள்ளது.
லைகா தயாரிப்பில் அஜித்குமார் நடிக்கும் 62வது படம் தயாராவது உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த படத்தை இயக்க முடிவு செய்யப்பட்டிருந்த விக்னேஷ் சிவன் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் இந்த படத்தின் இயக்குநர் யார் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
வெங்கட் பிரபு, சுந்தர் சி, விஷ்ணு வர்தன் என பல பெயர்கள் அடிபட்டாலும் மகிழ் திருமேனி தான் இப்படத்தின் இயக்குநர் என பலர் உறுதியாக கூறினர். லண்டனுக்கு சென்று மகிழ் திருமேனியே லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அஜித்தையும் சந்தித்தார் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அஜித் சில நிபந்தனைகளை விதித்ததாகவும் இதனால் மகிழ் திருமேனியும் படத்தை இயக்குவாரா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய நிபந்தனையாக 4 மாதங்களுக்குள் ஷூட்டிங்கை முடிக்க வேண்டும் என பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்குவதில் சிக்கல் நிலவுகிறது. தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என திட்டமிட்டுள்ள அஜித், இப்படி தாமதமானால் அது நிறைவேறுமா என்பதில் வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu