யூ டியூப் விமர்சகர்மீது கண்டனக் கணைகளால் பாயும் அஜித் ரசிகர்கள்..!

யூ டியூப் விமர்சகர்மீது கண்டனக் கணைகளால் பாயும் அஜித் ரசிகர்கள்..!
X

யூ டியூப் விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.

பிரபல யூ டியூப் விமர்சகருக்கு அஜித் ரசிகர்கள், சமூக வலைத்தளங்கள் மூலம் கடும் கண்டனக் கணைகளை வீசி வருகின்றனர்.

திரைப்பட விமர்சனத்தை மட்டுமே கையிலெடுத்து தங்களது யூ டியூபில் விமர்சிக்கும் விமர்சகர்கள் பலர் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர்க்கென்று ஒரு பாணியில் தங்களது விமர்சனங்களை முன் வைப்பர். இவ்வகையில், தனக்கென்று தனி பாணியில் யூ டியூப் மூலம் திரைப்படங்களுக்கு விமர்சனம் அளிப்பவர் ப்ளூ சட்டை மாறன். தமிழில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இவர் அளிக்கும் நெகட்டிவான விமர்சனங்கள் மூலம் சமூக வலைதளங்களில் இவர் பெயர் மிகவும் பிரபலம். அதேநேரத்தில், இவர் பிரபல நடிகர்களின் படங்கள் மட்டுமின்றி அவர்களது உடல்மொழி, அவர்களது நிகழ்வுகளின் பேச்சுகளையும் விமர்சிப்பதற்கு ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அண்மைக்காலமாக, அஜித், ரஜினிகாந்த், பார்த்திபன் என பல முன்னணி நடிகர்களின் தனிப்பட்ட நிகழ்வுகளையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறனை சம்பந்தப்பட்ட பிரபலங்களின் ரசிகர்கள் ஒருபுறம் தங்களது சிறப்பு வார்த்தைகளால் பதிலுக்கு அர்ச்சனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், திருச்சியில் ரைபிள் கிளப்பில் நடந்த துப்பாக்கிச்சுடும் போட்டியில் பங்கேற்ற அஜித்தை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. நள்ளிரவு வரை காத்திருந்த ரசிகர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர். பின்னர், அஜித் ரசிகர்களை சந்தித்து கையசைத்தார். மேலும், மாடியில் இருந்து அவர் ரசிகர்களை நோக்கி கையசைத்தது அன்றைய தினம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சிட்டிசன் பாணியில் அஜித் கையசைத்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்தது.

இதனை, ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டுள்ளார். 'தானே கையசைத்த அஜித்' என்று பதிவிட்டுள்ள அவரை, அஜித்தின் ரசிகர்கள் பின்னூட்டத்திலும் அவரவர் சமூக வலைத்தளப் பக்கங்களிலும் கழுவிக்கழுவி ஊற்றி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த்தின் பேச்சையும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், அஜித் பற்றியும் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். தொடர்ந்து அவர் இவ்வாறு திரைப்பிரபலங்களை கடுமையாக விமர்சிப்பதற்கு பலரும் ப்ளூ சட்டை மாறனுக்கு தொடர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!