'தல' செய்த தரமான சம்பவம்: வைரலான 'வலிமை' நாயகனின் படங்கள்

வாகா எல்லைக்கு பைக்கில் சென்ற அஜித், அங்கு ராணுவ வீரர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழ் நடிகர்களிலேயே 'தல' அஜித், சற்று மாறுபட்டவர். தன்னம்பிக்கைக்கு உதாரணமாக பலராலும் குறிப்பிடப்படும் அஜித், பைக் ரேஸ் மீது தீராத காதல் கொண்டவர்.

எல்லை காக்கும் 'சாமி'களுடன் நம்ம 'சிட்டிசன்'

அப்படித்தான் தற்போது தனது 'வலிமை' படத்தின் ஷூட்டிங் முடித்த கையோடு, பைக்கில் வட மாநிலங்களில் அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆக்ராவில் தாஜ்மஹாலை பார்வையிட்ட அஜித், பின்னர் அங்கிருந்து இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான பஞ்சாப் மாநிலம் வாகாவுக்கு பைக்கில் சென்றுள்ளார்.

நீங்க எல்லாம் தாங்க நிஜ ஹீரோக்கள் என்று சொல்கிறாரோ அஜித்.

பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும், வாகா எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்த அஜித், அவர்களுடன் உற்சாகமுடன் உரையாடி, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டார். தேசியக்கொடியுடன் வாகா எல்லையில் கம்பீரமாக அஜித் நிற்கும் புகைப்படம்தான், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தலையாய பணிகளுக்கு நடுவே, 'தல'யுடன் செல்ஃபி எடுத்து மகிழும் வீரர்கள்.

போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவான 'வலிமை' படத்தை, எச்.வினோத் இயக்கி இருக்கிறார். ஹீமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம், வரும் தைப்பொங்கல் தினத்தன்று திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்