'ஐயா விஜய்' - நடிகர் கமல்ஹாசன் விளக்கம்..!
பைல் படம்.
நான்காண்டுகளுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படத்தின் மூலம் உலகளவில் பல்வேறு மொழிகளில் திரையில் தோன்றியிருக்கிறார். படம் பெருவெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வசூலில் இதற்கு முன்பான பல சாதனைகளைப் படம் முறியடித்துள்ளது. 'விக்ரம்' வெளியாவதற்கு முன்பு ஏராளமான புரமோஷன்களை படத்துக்காக செய்யப்பட்டபோது அத்தனையிலும் கலந்துகொண்டு நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்போது, இன்னும் கூடுதலான உற்சாகத்தை அளிக்கும் வகையில், படத்தின் வெற்றிக்கு வித்திட்ட ஒவ்வொருவரையும் தேடித்தேடிப்போய் நன்றி தெரிவித்து வருகிறார். அத்தருணங்களில் நன்றியையும் அன்பையும் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தநிலையில் அண்மையில், 'விக்ரம்' பட புரமோஷன் தொடர்பாக நிகழ்ந்த நிகழ்வு ஒன்றில் சூர்யாவை வைத்துப் படம் எடுத்ததைப்போல 'விக்ரம்-3'ல் நடிகர் விஜய் நடிப்பதற்கான வாய்ப்பு உள்ளதா என்கிற கேள்வி எழுந்தது. அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, 'விஜய் ஐயா' சம்மதித்தால் அது சாத்தியமாகும் என்று பதிலளித்திருந்தார். அது அப்போது, பலவித கேள்விகளையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியது.
இப்போது, அதற்கான விளக்கத்தைக் கூறிய கமல், ''விஜய் மீது இருந்த அன்பினால்தான் அன்று அவ்வாறு 'ஐயா விஜய்' என்று அழைத்தேன். சிவாஜி சார் என்னை, 'கமல் ஐயா' என்றுதான் அழைப்பார் என்று தொடர்புப்படுத்தி விளக்கம் கூறியிருக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu