தனுஷை பிரிந்த நிலையில் அந்த நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! கொளுந்துவிட்டு எரியும் தீ!

தனுஷை பிரிந்த நிலையில் அந்த நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! கொளுந்துவிட்டு எரியும் தீ!
X
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல்! உண்மையை உடைத்த உறவினர்!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், வேறொரு நடிகரைத் திருமணம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும் மிகுந்த நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா வளர்ந்து வரும் நடிகர் ஒருவருடன் நட்பில் இருப்பதாகவும் அதுதான் இந்த புகைச்சலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்து வரும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இவர்களுடன் நடிகர் ரஜினிகாந்தும் ஒரு சில காட்சிகளில் நடித்து ஊக்கப்படுத்துகிறார். இதனால் இந்த படத்தின் மீது ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு தளங்களில் ரஜினிகாந்துக்கும் அவரது மகளுக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததை ஊடகங்கள் வாயிலாக நாம் அறிந்துகொண்டோம்.

கடந்த மே 8ம் தேதி போஸ்டர் வந்ததோடு சரி அடுத்ததாக அதுகுறித்த எந்த தகவலையும் லால் சலாம் படக்குழு கசிய விடவே இல்லை. ரஜினியின் வேறு எந்த கெட்டப்பும் வெளியே வரவில்லை. அவர் மொய்தீன் பாய் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் எனவும் முக்கியமான காட்சியில் அவரது கதாபாத்திரம் தோன்றும் எனவும் தகவல் வருகிறது.

இப்படி ஐஸ்வர்யா மும்முரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் திடீரென்று எங்கிருந்தோ கிளம்பிய புரளியாக இது பரவி வருகிறது ஆனால் இதில் துளியளவும் உண்மையில்லை. பட விவகாரங்களில் இயக்குநர் பலரை சந்திக்க வேண்டியிருக்கும், நண்பர்கள் பலர் இவருக்கு இருக்கிறார்கள். அப்படி யாரையோ இணைத்து யாரோ கொளுத்தி போட்ட வெடி இப்போது புகைந்து கொண்டிருக்கிறது என ரஜினிகாந்த் குடும்பத்துக்கு நெருக்கமான ஒருவர் ஆங்கில ஆன்லைன் தளம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த விசயம் இப்போதைக்கு முற்றுப்புள்ளியாகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!