ஐஸ்வர்யா ரஜனிகாந்த்தின் உருக்கமான பதிவும் படமும்..!

ஐஸ்வர்யா ரஜனிகாந்த்தின் உருக்கமான பதிவும் படமும்..!
X

தன மகன்களுடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்களைக் கட்டிப்பிடித்தபடி இண்டர்நெட்டில் பதிவிட்ட படமும் செய்தியும் அனைவரையும் நெகிழ்த்தியது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இந்த ஆண்டின் தொடக்கம் ரொம்பவே மனமொடியச்செய்தது எனலாம். ஆம். நடிகர் தனுஷும் அவரது மனைவியான ஐஸ்வர்யாவும் தாங்கள் ஒருவருக்கொருவர் பிரிந்து வாழப்போவதாக அறிவித்தனர். இந்தச் செய்திதான் ரஜினிகாந்த்தை அதிகமாக மனங்கலங்க வைத்தது. அதோடு, ரஜினி குடும்பத்தின் மீது பற்றுகொண்ட பலரையும் அந்த அதிர்ச்சி செய்தி அதிகம் வேதனையடைய வைத்தது.

நடிகர் தனுஷும் ரஜினிகாந்த்தின் மகளான ஐஸ்வர்யாவும் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாகக் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். தற்போது, அவர்களின் பிள்ளைகளும் பெரிய பிள்ளைகளாய் வளர்ந்துள்ள நிலையில், இருவரும் விவாகரத்து பெறுவதாக இந்த வருடத்தின் தொடக்கத்தில் அறிவித்தபோது, ரசிகர்களும் திரையுலகினரும் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனாலும், அவர்கள் இருவரிடையேயும் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர். அத்துடன், ரஜினிகாந்த்தும் இருவரிடமும் தனித்தனியே பேச்சு வார்த்தையை நடத்திப் பார்த்தார். எனினும், எவருடைய சமரச பேச்சு வார்த்தையையும் அறிவுறுத்தலையும் இருவருமே ஏற்றுக்கொள்ளாத நிலையில், சமரச முயற்சிகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்தன. அதன்பின், ஐஸ்வர்யா தனுஷ் மீண்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தாக மாறினார்.

அண்மையில், நடிகர் தனுஷ் தன் மகன்களை, தான் நடித்த ஹாலிவுட் படத்தின் ப்ரீமியர் ஷோவுக்கு அழைத்துச் சென்ற செய்தியும் படங்களும் சமூகவலைத்தளங்கள் எங்கும் வைரல் ஆனது. இந்தநிலையில், ஐஸ்வர்யா தன் மகன்களை கட்டிப்பிடித்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, "சில நேரங்களில்.. அவர்களது அணைப்பு மட்டும் இருந்தால் போதும்" என அதன் கீழே அவர் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார் .

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அந்தப் படங்களும் உருக்காமான அவரது பதிவும் பல தாயுள்ளங்களைப் பதற வைத்தது. அக்கறை கொண்ட அனைவரது மகிழ்ச்சியையும் சிதற வைத்தது. கலக்கத்தையும் வேதனையையும் மிகைக்க வைத்தது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!