ஜெயம் ரவியின் அகிலன் படம் மார்ச் 10 ம் தேதி வெளியீடு

ஜெயம் ரவியின் அகிலன் படம் மார்ச் 10 ம் தேதி வெளியீடு
X

பைல் படம்.

Jayam Ravi Padam-நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Jayam Ravi Padam-நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள அகிலன் திரைப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவரது நடிப்பில் இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னர் இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. கல்யாண் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.


இந்தப் படம் நெய்தல் நிலம் சார்ந்த கதை எனத் தெரிகிறது. இதில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் ஆன்டி-ஹீரோ போல உள்ளது. பிரியா பவானி சங்கர், காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அகிலன் பட போஸ்டரை ஜெயம் ரவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
தினமும் சிறிது தூரம் ஓடுவது.. உடலுக்கு இவ்வளவு நன்மை தருதா..!