சந்தானத்தின் 'ஏஜெண்டு கண்ணாயிரம்' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சந்தானத்தின் ஏஜெண்டு கண்ணாயிரம் -   ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
X
நடிகர் சந்தானம் நடிக்கும், ‘ஏஜெண்டு கண்ணாயிரம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

காமெடியனாக இருந்து ஹீரோவாகி, கவனத்தை ஈர்த்து வருபவர் நடிகர் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவான சந்தானம், நகைச்சுவையை மையப்படுத்திய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அண்மையில் வெளியான டிக்கிலோனா படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. சர்வர் சுந்தரம், சபாபதி உள்ளிட்ட படங்களிலும் சந்தானம் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில், விஜயதசமி நாளான இன்று, சந்தானத்தின் படம் குறித்த அறிவிப்பும், ஃபர்ஸ்ட் லுக் (முதல் தோற்றம்) போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. மனோஜ் பீடா இயக்க சந்தானம் நாயகனாக நடித்து வரும் இந்த படத்திற்கு, 'ஏஜெண்டு கண்ணாயிரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் முதல் தோற்றம் போஸ்டரை, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


'ஏஜெண்டு கண்ணாயிரம்' படம், ஸ்வரூப் ஆர்.எஸ்.ஜே இயக்கத்தில் நவீன், ஸ்ருதி ஷர்மா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடிப்பில் வெளியான தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். படப்பிடிப்பு, ஏறக்குறைய முழுமையடைந்த நிலையில், இறுதிகட்டப் பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா, இசை அமைத்துள்ளார்.

Tags

Next Story