ஆறாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா..!

ஆறாண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில்  நடிகர் சூர்யா..!
X

24 படத்தில் சூர்யா தோன்றும் காட்சி.

நடிகர் சூர்யா நடித்த '24' படத்தின் இரண்டாம் பாகத்தில், சூர்யாவும், இயக்குநர் விக்ரம் குமாரும் மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் இறுதிக்காட்சிகளில் வெறும் மூன்று நிமிடங்களே திரையில், ரோலக்ஸ் கேரக்டரில் தோன்றிய சூர்யாவுக்கு அத்தனை வரவேற்பும், பாராட்டும் கிடைத்தது.

தற்போது, இயக்குநர் பாலாவின் 'வணங்கான்' என்ற படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா, இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் ஆகியோர் இயக்கும் படங்களில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளயது.

இந்தநிலையில், இயக்குநர் விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா, கடந்த 2016-ம் ஆண்டு விக்ரம் குமார் இயக்கிய '24' என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் மூன்று வேடங்களில் ஹீரோ- வில்லன் என இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது, ஆறாண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் '24' படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருக்கிறது. இரண்டாம் பாகத்தையும் இயக்குநர் விக்ரம் குமார்தான் இயக்குகிறார். இப்படத்தில்தான் நடிகர் சூர்யாவும் இயக்குநர் விக்ரம் குமாரும் இணைய திட்டமிட்டு இருப்பதாகவும், இந்தப் படத்திலும் முதல் பாகத்தைப் போலவே ஹீரோ-வில்லன் என இரண்டு விதமான வேடங்களில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!