ரூ. 5 கோடி கேட்டு நடிகர் சூர்யா- ஜோதிகாவுக்கு நோட்டீஸ்: ஏன் தெரியுமா?

ரூ. 5 கோடி கேட்டு நடிகர் சூர்யா- ஜோதிகாவுக்கு நோட்டீஸ்: ஏன் தெரியுமா?
X
ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில், ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு சூர்யா- ஜோதிகாவுக்கு வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்து நடித்து வெளியான திரைப்படம், ஜெய்பீம். இதில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தில், வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, நடிகர் சூர்யாவுக்கு பகிரங்கமாக கேள்வி எழுப்பினார். இதற்கு சூர்யா தரப்பில் பதில் தரப்பட்டு, சர்ச்சையான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், தற்போது வன்னியர் சங்கம் சார்பில், ரூ 5 கோடி இழப்பீடு கேட்டு, நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த நோட்டீசில், 'ஜெய்பீம் திரைப்படத்தில், சர்ச்சைக்குரிய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். 7 நாட்களுக்குள் 5 கோடி ரூபாய் அபராதம் வழங்க வேண்டும். வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததற்காக நாளிதழ் மற்றும் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கோர வேண்டும். 24 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கோராவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags

Next Story
ai marketing future