அதிதி ஷங்கருக்கு விரைவில் திருமணமாம்! ஷங்கர் போட்ட அந்த கண்டிஷன் தெரியுமா?

அதிதி ஷங்கருக்கு விரைவில் திருமணமாம்! ஷங்கர் போட்ட அந்த கண்டிஷன் தெரியுமா?
X
அதிதி ஷங்கருக்கு விரைவில் திருமண ஏற்பாடுகளை செய்ய இயக்குநர் ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.

அதிதி ஷங்கர் இயக்குநர் ஷங்கரின் மகள். இவர் 2022 இல் வெளியான விருமன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இவர் கார்த்தி ஜோடியாக நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றி பெற்ற படம் மாவீரன். இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கருடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக விஜய் சேதுபதியின் குரல் இடம்பெற்றிருந்தது. இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். கடந்த மாதம் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அடுத்தடுத்து இரண்டு படங்களும் வெற்றி அடைந்த நிலையில், இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இவர் தனது சம்பளத்தையும் ஏற்றி தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். இப்போதுதான் இந்த கதையில் ஒரு டிவிஸ்ட். இவர் தனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியம் இப்போதுதான் டிவிஸ்ட் வைக்கிறது.

முதலில் அவர் நடிக்க வருவது ஷங்கருக்கு பிடிக்கவில்லையாம். அவர் டாக்டர் படித்துவிட்டு ஏன் நடிக்கிறாய் என்று கேட்டிருக்கிறார்.ஆனால் அப்பாவிடம் கெஞ்சி தனது கலைத்திறமையைக் காட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததால் அவர் சினிமாவில் நடிக்க சம்மதித்தார். ஆனால் தனது படத்தில் நடிக்க வைக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.

அதேநேரம் ஒரு சத்தியமும் வாங்கியிருக்கிறார். அதாவது 2 ஆண்டுகளுக்கு நீ என்ன வேண்டுமானாலும் செய். ஆனால் அதன்பிறகு நான் சொன்னது போல திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டாராம். ஷங்கர் கொடுத்த கெடு இந்த ஆண்டோடு முடிகிறதாம். இதனால் மாப்பிள்ளையை முடிவு செய்து திருமண ஏற்பாடுகளை கவனிக்கட்டுமா என்று கேட்கிறாராம் ஷங்கர்.

ஆனால் அதிதியோ சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார். அதை விட்டுவிட்டு தான் எப்படி வரமுடியும் என்று கேட்கிறாராம். இதனால் கூடுதலாக ஒரு வருடம் ஆனால் அதற்கு பிறகு கமிட் ஆககூடாது என்று கூறியிருக்கிறாராம்.

இதனால் அடுத்தடுத்து பல படங்களில் தனது நடிப்புத்திறமையை காட்டிவிட வேண்டும் என்று பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகின்றாராம் அதிதி.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!