Adipurush trailer ராமரின் வாழ்க்கை வரலாற்றை கண் முன் நிறுத்துமா ஆதிபுருஷ்?
பிரபாஸ், கிருத்தி சனோன் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் வரும் ஜூன் 16ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
பாகுபலி படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அடுத்தடுத்து மிகப் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக வெளியான சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்கள் படுதோல்வியடைந்ததையடுத்து இப்போது ஆதிபுருஷ் படத்தையே முழுமையாக நம்பியிருக்கிறார் பிரபாஸ்.
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாகக் கொண்டு தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ராமன் சீதையாக பிரபாஸ், கிருத்தி, ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். இதன் டீசர் கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று வெளியிடப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் காட்சிகளை கடுமையாக கேலி செய்து நெட்டிசன்கள் வைரலாக்கினர்.
ஆதிபுருஷ் திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu