ஆதிபுருஷ் to பொம்மை... இந்த வார ரிலீஸ்... வாங்க தெரிஞ்சிக்கலாம்!
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ், எஸ்ஜே சூர்யாவின் பொம்மை என தமிழ் சினிமாவில் இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்.
இந்த திரைப்படங்கள் இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன.
ஆதிபுருஷ்
டி-சீரிஸ், கிரிஆர்ஜ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், ஓம் ராவுத் மற்றும் பிரசாத் சுதார் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு, ஓம் ராவுத் இயக்கி வரவிருக்கும் இந்திய காவிய அதிரடி நாடகத் திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தில் பிரபாஸ், சைஃப் அலிகான், க்ரிதி சனோன், சன்னி சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஹிந்து இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே நடக்கும் போரின் கதையைச் சொல்கிறது.
இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 16 ஜூன் 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படம் இந்து இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதில் பிரபாஸ் ராமனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர்.
இதை ஓம் ரவுத் இயக்குகிறார்.
இது 16 ஜூன் 2023 அன்று வெளியாகியிருக்கிறது.
பொம்மை
எஸ்ஜே சூர்யா, பிரியா பவானி ஷங்கர் இரண்டாவது முறையாக இணையும் புதிய படம் பொம்மை. இந்த வாரம் வெளியாகும் இன்னொரு படம் இது. ராதாமோகன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தினி தமிழரசனும் நடித்துள்ளார்.
பொம்மை மீது காதல் கொள்ளும் இளைஞனின் கதையாக இது அமைந்துள்ளது.
எறும்பு
குணச்சித்திர நடிகர்களான ஜார்ஜ் மரியான், எம் எஸ் பாஸ்கர் நடிப்பில் உருவாகியுல்ள திரைப்படம் எறும்பு. இந்த படத்தை சுரேஷ் குணசேகரன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படமும் இந்த வாரம் ஜூன் 16ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை மண்ட்ரூ ஜிவிஎஸ் நிறுவனம் சார்பில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சார்லஸ் எண்டர்பிரைசஸ்
சுபாஷ் லலிதா சுப்ரமணியம் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம்தான் சார்லஸ் எண்டர்பிரைசஸ். ஊர்வசி, குரு சோமசுந்தரம், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி ரிலீசாகிறது. இந்த படத்தை அஜித் ஜாய் தயாரித்துள்ளார்.
ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள்
ராவணக் கோட்டம்
சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் வெளியான ராவணக் கோட்டம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
ஃபர்ஹானா
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான ஃபர்ஹானா திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
தமிழரசன்
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான தமிழரசன் திரைப்படம் வரும் ஜூன் 16ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.
பிச்சைக்காரன் 2
விஜய் ஆண்டனி தயாரித்து நடித்துள்ள பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் 17ம் தேதி முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu