ஆதி புருஷ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

ஆதி புருஷ் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!
X
விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிட துரிதமான ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

பிரபாஸ், கீர்த்தி சனோன், சன்னி சிங், சைப் அலிகான் ஆகியோர் நடித்து வரும் படம் ஆதி புருஷ். சுட்டி டிவியில் வரும் கார்ட்டூன் போல இருப்பதாக கிண்டலடிக்கப்பட்ட படமான இது இப்போது மீண்டும் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டு திரும்பவும் டீசர், டிரைலர் ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை பூஷன் குமார் தயாரித்து வருகிறார். இவருடன் இணைந்து ராஜேஷ் நாயரும் தயாரிக்கிறார். வரும் ஜூன் மாதம் 16ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படவுள்ள படம் ஆதி புருஷ்.

புரமோசன் பணிகளைத் துவங்கியுள்ளது படக்குழு. இப்போதிருந்தே மெது மெதுவாக சில புரமோசன்களை நிகழ்த்த திட்டமிட்டிருக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று ஜம்மூ காஷ்மீருக்கு சென்ற இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மாதா வைஷ்ணவி தேவி கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.

இந்நிலையில் இன்று ஆதி புருஷ் நாயகன் பிரபாஸ், நாயகி கீர்த்தி சனோன் உள்ளிட்டவர்களின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

ராமராக பிரபாஸ், சீதாவாக கீர்த்தி, லட்சுமணனாக சன்னி சிங், பஜ்ரங்கியாக தேவ்தத்தா இருக்கும் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்த போஸ்டரை பிரபாஸ், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பிரபலங்கள் ஷேர் செய்துள்ளனர்.

விரைவில் படத்தின் டீசரும் அடுத்து டிரைலரும் வெளியாகும் என்று கூறப்படுகிறது. வரும் ஜூன் 16ம் தேதி படத்தை திரையரங்கில் வெளியிட துரிதமான ஏற்பாடுகள் நடந்தேறி வருகின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!