தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சினேகா-பிரசன்னா தம்பதியினர்

சினேகா-பிரசன்னா தம்பதியினர்.
Actress sneha tamil new year celebration photos-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் சினேகா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இதுமட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சில டிவி ஷோக்களில் ஜட்ஜாக இருந்து வருகிறார்.
சினேகா-பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நட்சத்திர தம்பதியினர் அனைத்து பண்டிகையும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவர்களின் கொண்டாட்ட நிகழ்வுகளை இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தமிழ் புத்தாண்டை துபாயில் கொண்டாடினர். இந்நிலையில் சினேகா-பிரசன்னா தம்பதியினர் இந்த ஆண்டு தங்கள் குழந்தைகளுடன் அவர்களது வீட்டில் தமிழ் புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu