Goundamani Sharmili: நடிகை ஷர்மிளிக்கு நெருங்கும் குழந்தை பிறப்பு காலம்..

Goundamani Sharmili: நடிகை ஷர்மிளிக்கு நெருங்கும் குழந்தை பிறப்பு காலம்..
X
நடிகை ஷர்மிளிக்கு குழந்தை பிறப்பு காலம் நெருங்குவதால் அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

Goundamani Sharmili: தமிழ் சினிமாவில் 90களில் நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் தமிழ்,தெலுங்கு, மலையாளம் என ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் கவுண்டமணியுடன் மட்டும் சுமார் 27 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் இவர் தற்போது எங்கு இருக்கிறார் என்று தேடும் அளவுக்கு சினிமாவை விட்டுவிலகி உள்ளார்.

மேலும், க்ரூப் டான்ஸராக இருந்த நான், பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கணும், எங்கவீட்டு வேலன் போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன் அப்போதுதான் கவுண்டமணிக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று அழைப்பு வந்தது. எனக்கு காமெடி எல்லாம் வராது, அதுவும் இல்லாமல் அவர் வயசு என்ன, என் வயசு என்ன என்று மறுத்துவிட்டேன்.

அதன் பிறகு கவுண்டணிக்கு ஜோடியாக கிட்டத்தட்ட 27 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். நான் கவுண்டமணியுடன் நடித்ததால் தான் பிரபலமானேன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அவருடன் சேர்ந்து நடித்ததால் பல நல்ல கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். அதே போல அவரும் பல பட வாய்ப்பை கெடுத்து இருக்கிறார்.

வீரா படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு என்னை புக் செய்து இருந்தார்கள். ஆனால் கவுண்டமணி அதே தேதியில் தான் நான் டேட் கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லி நடிக்க முடியாமல் செய்துவிட்டார். இதனால், கவுண்டமணியிடம் கேட்டு ஷூட்டிங்கிற்கு தேதி புக் செய்யும் நிலைமையாகிவிட்டது. ஒரு கட்டத்தில் பத்திரிக்கையில் ஷர்மிலி கவுண்டமணியுடன் மட்டும் தான் நடிப்பார் என்று எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

இதனால், நான் கவுண்மணிக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். நான் அப்படி சொல்லிவிட்டதால், டென்ஷனாக கவுண்டமணி புக்காகி இருந்த அனைத்து படத்திலிருந்து என்னை தூக்கி விட்டார். இதுபோன்று பல படத்தில் இருந்து என்னை நீக்கி என் பொழப்பை கெடுத்தது, வாழ்க்கையை நாசமாக்கியது கவுண்டமணி தான் என்று ஷர்மிலி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

ஏற்கெனவே நடிகை ஷர்மிலி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தற்போது நான் திருமண வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என் கணவர் என்னை அன்பாக கவனித்துக்கொள்கிறோர். ஒரு காலத்தில் திருமணமே வேண்டாம் என்று இருந்தேன். ஆனால், 40வயதுக்கு மேல் நிச்சயம் ஒரு துணை தேவை என்பதை புரிந்து கொண்டு திருமணம் செய்து கொண்டேன். இப்போது நான் கர்ப்பமாக இருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இதற்கு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அவர் பேட்டியளித்த நாளிலிருந்து தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!