பரத் பட நடிகைக்கு பிறந்த குழந்தை! தாய் சேய் நலம்!
முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் பரத் ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகை பூர்ணாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சவரக்கத்தி, ஜன்னல் ஓரம், கொடிவீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பூர்ணா. இவரது பெயர் ஷம்னா காசிம். திரைப்படங்களில் நடிப்பதற்காக பூர்ணா என பெயரை மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும்போதே நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து தமிழின் முன்னணி நடிகையாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தொடர்ந்து இவர் நல்ல கதைகள் எதையும் தேர்வு செய்யாமலே இருந்துகொண்டிருந்தார். சினிமாவில் பெரிய அளவில் ஆர்வம் இல்லையா அல்லது சரியான நபர்களை இவர் பக்கத்தில் வைக்கவில்லையா என்பது தெரியவில்லை. சில படங்களில் நடித்திருந்த போதே, மனைவி கதாபாத்திரத்திலும், அண்ணி கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பு வந்தது. வேறு வழியில்லாமல் சர்வைவ் ஆகவேண்டும் என்கிற நோக்கில் அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார்.
ஒரு கட்டத்தில் சினிமா வாய்ப்பின்றி தவித்த பூர்ணாவுக்கு ஆறுதலாக இருந்தார் தொழிலதிபர் ஒருவர். அவருடன் நட்புடன் பழகி வந்த பூர்ணா நாளடைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்.
கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் பூர்ணாவுக்கு திருமணம் நடைபெற்றது. தொழிலதிரான ஷானித் ஆசிஃப் அலியுடன் அவருக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் அவர் கர்ப்பமானார். இந்த செய்தியை அவர் அறிவிக்கும் முன்னரே இணையதளங்களில் வேகமாக பரவியது. அதனை அவர் உறுதி செய்து வீடியோ ஒன்றில் பேசியிருந்தார்.
இந்நிலையில் ஷம்னா காசிமுக்கு இப்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சினிமா பிரபலங்கள், நண்பர்கள், உறவினர்கள் என பலரும் ஷாம்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu