நடிகை சமந்தா நடித்த 'யசோதா' படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நடிகை சமந்தா நடித்த யசோதா படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
X
நடிகை சமந்தா நாயகியாக நடித்து வெளியான 'யசோதா' திரைப்படத்தின் பத்து நாட்கள் வசூல் படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

அண்மைக்காலமாகவே, திரையரங்குகளில் திரைப்படங்களுக்கான வரவேற்பு திரும்பத் தொடங்கியுள்ளது. ரசிகர்களும் நல்ல திரைப்படங்களையும் தங்களது அபிமான நட்சத்திரங்களின் திரைப்படங்களையும் கொண்டாடத் தவறுவதில்லை. அந்தவகையில், நடிகை சமந்தா நாயகியாக நடித்து வெள்ளித் திரையில் வெளியான 'யசோதா' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலிலும் முந்திச் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நடிகை சமந்தா தனக்கு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்ததும் ரசிகர்கள் ரொம்பவே ஃபீல் செய்யத் தொடங்கிவிட்டனர். சுமார் 3 மாதங்களாக அந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த சமந்தா, 'யசோதா' திரைப் படத்தின் ரிலீஸை முன்னிட்டு அந்த நோயால், தான் பாதிக்கபட்டு இருப்பதாக மிகவும் உருக்கமாக அறிவித்திருந்தார். அதன் பின்னர், வெளியான 'யசோதா' திரைப்படம் 10 நாட்களில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ளது. இதனால், படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இந்தத் திரைப்படம், இரட்டை இயக்குநர்களான ஹரி சங்கர் மற்றும் ஹரீஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகியது. வாடகைத்தாய் பேரில் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்தும் விதமாக உருவான 'யசோதா' திரைப்படம் கடந்த நவம்பர் 11ம் தேதி வெளியானது. இத் திரைப் படத்தில் சமந்தா, வரலக்‌ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், சம்பத் உள்ளிட்ட பலர் முக்கியக் கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப் படத்தில் நடிகை சமந்தா, வாடகைத் தாய் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். அவரைப் போல பல பெண்கள் ஒரு லேப்பில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை அறிந்து கொள்ளும் சமந்தா ஆக்‌ஷன் நாயகியாக மாறி எதிரிகளை பந்தாடி மற்ற பெண்களைக் காப்பாற்றுவதே 'யசோதா' திரைப் படத்தின் கதை ஆகும்.

'யசோதா' திரைப் படம் வெளியான முதல் நாளிலேயே ரூ. 5 கோடிக்கும் அதிகமான வசூல் குவிந்தது. முதல் வார முடிவில், அதாவது 4 நாட்களில் நடிகை சமந்தாவின் 'யசோதா' திரைப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்தது. வார நாட்களில் படத்தின் வசூல் சற்று மந்தமான நிலையில், மீண்டும் வார இறுதி நாட்களில் சூடு பிடிக்கத் தொடங்கியது.

இந்தநிலையில், 'யசோதா' திரைப்படம் வெளியாகி 10 நாட்களைக் கடந்த நிலையில், படத்தின் ஒட்டுமொத்தமாக இதுவரை 33 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. நடிகை சமந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாத நிலையில், இப்படியொரு வெற்றியை அவருக்கு ரசிகர்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ள நிலையில், தொடர்ந்து ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்கள் வழியாக நடிகை சமந்தா தனது நெகிழ்வான நன்றியைத் தெரிவித்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சித் துள்ளலில் உள்ளனர்.

அடுத்ததாக, நடிகை சமந்தா நடிப்பில் 'சகுந்தலம்', 'குஷி' உள்ளிட்ட தெலுங்குத் திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா அந்தப் படங்களின் பணிகளை முடித்துக் கொடுக்கவும் மிகவும் போராடி வருகிறார். நடிகை சமந்தாவின் இந்த வெற்றி அவருக்கு மேலும், உற்சாகத்தை அளித்துள்ளது என்கிறார்கள் சமந்தாவின் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!