நவம்பரில் நடிகை சமந்தாவின் 'சாகுந்தலம்'... மகிழ்வில் வரவேற்பில் ரசிகர்கள்..!

Samantha Actress | Shaakuntalam
X

சாகுந்தலம் பட போஸ்டர் (பைல் படம்).

Samantha Actress -நடிகை சமந்தா நடித்துள்ள புராணப்படமான 'சாகுந்தலம்' வெளியாகும் தேதியை படத் தயாரிப்புத் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Samantha Actress -நடிகை சமந்தா, 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காளிதாசனின் புகழ்பெற்ற சமஸ்கிருத நாடகமான 'சாகுந்தலம்' என்ற புராண கதையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் மதுபாலா, கெளதமி, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, சச்சின் கெடேகர், கபீர் பேடி மற்றும் ஜிஷு சென்குப்தா உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக துஷ்யந்த் கதாபாத்திரத்தில் தேவ் மோகன் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி , தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகும் இப்படத்தினை வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில், சமந்தாவின் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் அப்டேட் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, 'சாகுந்தலம்' படம் வரும் நவம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருப்பதாக படகுழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை உறுதி செய்யும் வகையில் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story