'உன்னோடு வாழ்ந்த வீடு… இனி என்னிடம்…' - சமந்தா வாங்கிய காதல் வீடு..!

உன்னோடு வாழ்ந்த வீடு… இனி என்னிடம்… - சமந்தா வாங்கிய காதல் வீடு..!
X

பைல் படம்

நாகசைதன்யாவுடன் ஹைதராபாத்தில், தான் இணைந்து வாழ்ந்த இல்லத்தை இப்போது, அதிக விலைகொடுத்து வாங்கியிருக்கிறார் சமந்தா.

தெலுங்குப் பட உலகின் முன்னணி நடிகரான நாகசைதன்யாவை, 2017-ம் ஆண்டு காதல் மணம் புரிந்து கரம் பற்றினார் தென்னிந்தியத் திரைவானின் முன்னணி நடிகை சமந்தா. திருமணம் முடிந்து ஹைதராபாத்தில் ஆடம்பரமான வீடொன்றை வாங்கி அதில் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். அந்தக் காதல் மாளிகையை இவர்களின் மணமுறிவுக்குப் பிறகு இந்தக் காதல் மாளிகையான அந்த வீட்டை விற்றுவிட்டனர்.

இந்தநிலையில், தெலுங்கு திரைப்பட உலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான முரளி மோகன், சமந்தா பற்றி தெரிவித்திருக்கும் தகவல் வைரலாகியிருக்கிறது.பேட்டி ஒன்றில் பேசிய முரளி மோகன், நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை சமந்தா வாங்கிய தகவலை விலாவரியாகப் பகிர்ந்திருக்கிறார்.

விவகாரத்துக்குப் பின்னர் பல வீடுகள் தேடியும், சமந்தாவுக்கு பிடித்தமான வீடுகள் அமையவில்லையாம். மீண்டும் அதே வீட்டை வேண்டும் என்று கேட்கும்போது, அந்த வீட்டை வாங்கியவர் அதிக விலை கூறியிருக்கிறார். விலையைப் பற்றி கவலைப்படாத சமந்தா, வீடு வாங்கியவர் கேட்ட பணத்தை கொடுத்து அந்த வீட்டை மீண்டும் வாங்கியதாக முரளி மோகன் தெரிவித்திருக்கிறார். வீடு வாங்கியவர் தனக்கு தெரிந்தவர் என்பதால், அவரிடம் பேசி இந்த வீட்டை சமந்தாவுக்கு வாங்கிக் கொடுத்தாகவும் முரளி மோகன் கூறியிருக்கிறார். தற்போது அந்த வீட்டில் தாயுடன் சமந்தா தங்கியிருக்கிறாராம்.நாகசைதன்யாவுடன் வாழ்ந்த கடந்த கால காதல் நினைவுகள் மனத்தில் அலையடிக்காதா என்கிறார்கள் ரசிகப்பிள்ளைகள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!