நடிகை சமந்தா உடல்நிலையில் மோசம்.. தெளிவுபடுத்திய மேலாளர்

நடிகை சமந்தா உடல்நிலையில் மோசம்.. தெளிவுபடுத்திய மேலாளர்
X

நடிகை சமந்தா.

samantha admitted in hospital again - நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி வதந்தி என மேலாளர் தெரிவித்துள்ளார்.

samantha admitted in hospital again - நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி வதந்தி என மேலாளர் தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தியை நம்பவேண்டாம் என அவரது மேலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகையான சமந்தா, சமீபத்தில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகள் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது அனைவரும் அறிந்ததே. அன்று முதல் சமந்தாவின் உடல்நிலை குறித்த செய்திகள் தினமும் வைரலாகி வருகிறது. சமீபகாலமாக சமந்தாவின் உடல்நிலை குறித்து ஊடகங்களில் பல வதந்திகள் பரவி வருகின்றன. உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து அவர் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

samantha latest news

இந்த நிலையில் இந்த ஆதாரமற்ற வதந்திகளுக்கு சமந்தாவின் மேலாளர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் சமந்தா வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஊடகங்களில் வரும் அனைத்தும் பொய்யான செய்திகள் என்றும், சமந்தாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் இல்லை என்றும், இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் மேலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

samantha health

இதனிடையே சமந்தா நாயகியாக நடித்துள்ள 'யசோதா' திரைப்படம் நவம்பர் 11ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக ரிலீஸானது. ஏற்கனவே, உலகம் முழுவதும் ரூ.25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பெரிதாக ரிலீஸ் இல்லாததால் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள். ஹரி-ஹரிஷ் இயக்கிய படத்தில் மருத்துவ உலகின் ரகசியங்களை வெளிப்படுத்தும் வாடகைத் தாயை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா மற்றும் பிரியங்கா ஷர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாக உள்ளது.

யசோதா படத்தின் ப்ரோமோஷனின் போது, ​​தன் உடல்நிலை குறித்து மனம் திறந்து பேசினார் சமந்தா. தன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது குறித்து, தான் கடந்து வந்த பயணத்தை நினைவு கூர்ந்த சமந்தா, அவருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

மேலும் சில நாட்கள் நல்லதும், சில நாட்கள் கெட்டவைகளும் நடக்கின்றன. சில நாட்களில், இன்னும் ஒரு அடி எடுத்து வைப்பது கூட கடினமாக இருக்கும் என்று உணர்ந்தேன். ஆனால் நான் திரும்பிப் பார்க்கும்போது, ​​நான் இவ்வளவு துன்பங்களையும் கடந்து வந்திருக்கிறேன், இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று ஆச்சரியப்படுகிறேன். நான் என் வாழ்க்கையில் போராட வந்திருக்கிறேன் என தெரிவித்திருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!