'ஹஸ்பன்ட்' என்றதை 'எக்ஸ்-ஹஸ்பன்ட்' என திருத்தம் செய்த நடிகை சமந்தா..!

ஹஸ்பன்ட் என்றதை எக்ஸ்-ஹஸ்பன்ட் என திருத்தம் செய்த நடிகை சமந்தா..!
X

காபி வித் கரண் நிகழ்ச்சியில் நடிகர் அக்ஷ்ய குமாருடன் நடிகை சமந்தா கலந்து கொண்ட காட்சி.

samanatha narrates ex-husband-தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் எனக்கு கணவர் அல்ல, முன்னாள் கணவர் என திருத்தம் செய்த நடிகை சமந்தாவின் வீடியோ வைரலாகி வருகிறது .

samanatha narrates ex-husband-டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஒளிபரப்பாகும் காபி வித் கரண் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாகும். பிரபல ஹிந்தி இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் காபி வித் கரண் நிகழ்ச்சி 7 சீசன்களாகத் தொடர்ந்து வருகிறது. இதனுடைய 7-வது சீசனில் தற்போது சமந்தா மற்றும் பிரபல ஹிந்தி நடிகர் அக்ஷ்ய குமார் இருவரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கரண் ஜோகர் இயக்கிய கபி குஷி கபி கம் திரைப்படத்தை குறிப்பிட்டு, "வாழ்க்கை கே3ஜி (கபி குஷி கபி கம்) போல் இருக்கும் என்று நீங்கள் காட்டினீர்கள், ஆனால் வாழ்க்கை கேஜிஎப் போன்று இருக்கிறது. இதுதான் மகிழ்ச்சியில்லாத திருமணங்களுக்கு காரணம்" என்று சமந்தா குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வீடியோ புரோமோவில் வெளியானதும் வைரலானது. இதனை தொடர்ந்து சமந்தா மற்றும் அக்ஷய் குமார் இருவரும் ஓ சொல்றியா மாமா படலுக்கு நடனமாடினர். இந்நிலையில்தான் கரண் ஜோகர், இந்நிகழ்ச்சியில் சமந்தாவின் விவாகரத்து குறித்த கேள்வியை கேட்கும்பொழுது, "உங்களுடைய கணவர்" என்று குறிப்பிட்டு பேச, அப்போது இடைமறிக்கும் சமந்தா, "முன்னாள் கணவர்" என்று திருத்தம் செய்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

samanatha narrates ex-husband-கடைசியாக புஷ்பா படத்தில், 'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு நடனமாடிய சமந்தா, சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களில் நடிக்கத் தொடங்கினார். முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!