தஞ்சை பெரிய கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்

தஞ்சை பெரிய கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்
X

தஞ்சை பெரிய கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம் செய்தார்.

Sai Pallavi Latest News-தஞ்சை பெரிய கோவிலில் நடிகை சாய் பல்லவி சாமி தரிசனம்

Sai Pallavi Latest News-நடிகை சாய் பல்லவி தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் முன்னணி கதநாயகியாக திகழ்ந்து வருகிறார். ஃபிடா படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான சாய் பல்லவி, தென்னிந்தியாவில் திறமையான நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் மலையாள படத்தின் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் கவனம் ஈர்த்தவர் சாய்பல்லவி. சமீபத்தில் இவர் நடித்து வெளியான கார்கி படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு நற்பெயரை ஈட்டிக்கொடுத்துள்ளது.


நாக சைதன்யாவுக்கு ஜோடியாக அவர் நடித்த லவ் ஸ்டோரி, நானி ஜோடியாக ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் இவருக்கு மேலும் நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. சமீபத்தில் வெளியான விராத பர்வம் திரைப்படமும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. சாய் பல்லவியின் நடிப்பு இந்த திரைப்படங்களில் முக்கிய அம்சமாக அமைந்தது.

sai pallavi latest news, sai pallavi visited tanjore periya kovilஇந்நிலையில் நடிகை சாய் பல்லவி நேற்று சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து தலை நிறைய மல்லிகைப்பூ சூடி தஞ்சாவூர் பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். சாய் பல்லவி கோவில் விமானத்தை அண்ணாந்து பார்ப்பது போல புகைப்படத்தையும் அவர் இணையத்தில் பகிர்ந்துள்ளார்‌.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story