நடிகை ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி...!

நடிகை ரித்திகா வளைகாப்பு நிகழ்ச்சி...!
X
சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இதனையடுத்து அவரது வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

ரித்திகா தமிழ் செல்விக்கு சமீபத்தில் திருமணம் முடிந்த நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார். விரைவில் குழந்தைப் பேறு அடைய இருக்கும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு விஜய் தொலைகாட்சி பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி ராஜாராணி தொடர். இந்த தொடரில் அறிமுகமானவர்தான் ரித்திகா தமிழ்ச்செல்வி. இவர் அந்த தொடரில் வினோதினி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த தொடரில் ஓரளவுக்கு பிரபலமானாலும் அவர் மிகவும் பிரபலமானது பாக்கியலட்சுமி தொடரில்தான். அதில் நாயகனாக நடித்திருந்தவருக்கு காதலியாக வரும் இவர் பின் திருமணம் செய்துகொள்வதாக கதை இருக்கும். இதனால் அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நல்ல பிரபலமானார் ரித்திகா.


பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டிருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்ட ரித்திகா, தன்னுடைய திறமையைக் காட்டி அதில் விதவிதமாக சமையல் செய்து அசத்தினார். குறைந்த நாட்களே வந்தாலும் நல்ல பெயரை எடுத்திருந்தார்.

குக் வித் கோமாளி பாலாவும், ரித்திகாவும் சேர்ந்து அட்டகாசம் செய்தனர். இது ரசிகர்களிடையே இவரை மிகவும் பிரபலமாக்கியது. இவர்கள் காதலிக்கிறார்கள் என்றெல்லாம் புரளி கிளம்பும் அளவுக்கு இவர்களது கெமிஸ்ட்ரி ஒர்க் ஆனது. ஆனால் அவர் ஏற்கனவே வினு என்பவரை பல ஆண்டுகளாக காதலிப்பது தெரியவந்தது. அவரையே பெற்றோர் விருப்பத்துடன் திருமணம் செய்துகொண்டார் ரித்திகா.


திருமணம் முடிந்த கையுடன் பாக்கியலட்சுமி சீரியலிலிருந்து விலகி வெளியில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இதனையடுத்து அவரது வளைகாப்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்களான பாடகர் அஜய் கிருஷ்ணா, நடிகை ஸ்ரீதேவி அஷோக்குமார், அம்மு அபிராமி, நடிகை ஜனனி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!