பயில்வான் ரங்கநாதனை வறுத்தெடுத்த நடிகை ரேகா நாயர்..!
நடிகரும் ஊடகவியலாளருமான பயில்வான் ரங்கநாதன், அவரது யூடியூப் சேனலில் நடிகை ரேகா நாயர் அரை நிர்வாணமாக நடித்தது குறித்து மிகவும் வரம்பு மீறி பேசியிருந்தார். 'இறந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தோழிதான், நடிகை ரேகா நாயர். சித்ரா இறந்தபோது அவருடைய அறையில் என்னென்ன அந்தரங்க விஷயங்கள் இருந்தது என்று நமக்கு தெரியும். அவருடைய தோழிதானே இவர், நிர்வாணமாக மட்டுமில்லை எப்படி வேண்டுமானாலும் நடிப்பார் அவருக்கு எல்லாமே சகஜம்' என்று ரேகா நாயரை மிகவும் கேவலமாக பேசி இருந்தார் பயில்வான்.
இந்தநிலையில், சென்னை திருவான்மியூர் கடற்கரைப் பகுதியில் பயில்வான் ரங்கநாதன் உடற்பயிற்சிக்காக சென்று கொண்டிருந்தபோது, அங்கே வந்திருந்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனை வழிமறித்து வெளுத்து வாங்கிவிட்டார். 'சினிமா நடிகைகளைக் கேவலாகப் பேசுற, அடுத்தவர்களை பற்றிப்பேசும் நீ, உன் மகன் என்ன பண்றானு தெரியுமா' என பயில்வானை அடிக்கப் பாய்ந்தார். அதோடு, 'நான் அம்மனாக நடிப்பேன் அதைக் கேட்க நீ யார்..? நான் உன்னுடைய பிள்ளையா.. இல்ல உன் பொண்டாட்டியா நீ யார்?' என கடும் கோபத்தில் எகிறினார்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் சிலர் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ,ரேகா நாயர் கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் சமாதானம் ஆகவில்லை. அதுமட்டும் இன்றி, பயில்வான் ரங்கநாதனும், 'நீ நிர்வாணமாக நடிச்சா அப்படித்தான் பேசுவேன்' என்றார். உடனே ரேகா, 'அப்போ அதைப்பற்றி பேசவேண்டியது தானே... சித்ரா விஷயம் பற்றி ஏன் பேசுன, உன்னை யாரும் எதுவும் கேட்கமுடியாதுனு நினைப்பா?' என பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கிவிட்டார் நடிகை ரேகா நாயர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu