கவர்ச்சி உடையில் அதகளப்பட்டுத்திய ராஷ்மிகா மந்தனா..!

கவர்ச்சி உடையில் அதகளப்பட்டுத்திய   ராஷ்மிகா மந்தனா..!
X
நடிகை ராஷ்மிகாமந்தனா மும்பை படவிழா ஒன்றில் இறுக்கமான கவர்ச்சி உடையில் மேடையில் தோன்றி காண்போர் கண்களை சுண்டி இழுத்தார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த 'புஷ்பா' கடந்த ஆண்டு(2022 டிசம்பர் 17) வெளியான பிளாக் பஸ்டர் ஹிட் படமாகும். அப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடத்தில், 'கிரிக் பார்ட்டி' என்னும் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். இவ்வகையில், ராஷ்மிகா ஒரு கன்னட நடிகையாக இருந்தாலும், இவர் பிரபலமானது தெலுங்குப் பட உலகில்தான். ஆம். அங்குதான் இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

இதற்குக் காரணம், இவர் நாயகியாக நடித்த 'கீதா கோவிந்தம்' மற்றும் 'டியர் காம்ரேட்' ஆகிய படங்கள்தான். இப்படங்கள்தான் இவரை தெலுங்குப் பட உலகில் மிகச் சரியாக பொதுத் தளங்களில் அடையாளப்படுத்தியது. இதனைத் தொடர்ந்துதான் தெலுங்கில் ராஷ்மிகாவுக்கு மளமளவென படங்கள் வந்து குவியத் தொடங்கின. அவ்வகையில், தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் 'சரிலேரு நீகேவாரு' படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்துதான் நடிகர் அல்லு அர்ஜுனுடன் 'புஷ்பா'வில் நடித்து அசத்தினார்.

இப்படத்துக்கான புரமோஷனுக்காக அப்போது, இந்தியாவின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரத்தில் நடந்த விழாக்களின்போது நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்து வந்த கவர்ச்சி உடை, 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் கவர்ச்சியான டான்ஸ் போட்டு ரகளப்படுத்திய சமந்தாவின் அரைகுறை ஆடையையே தூக்கி தூரத் தள்ளிவிட்டது எனும் அளவுக்கு ராஷ்மிகாவின் கவர்ச்சி உடை நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வாய்பிளக்க வைத்தது.

தற்போது அதேபோல், மும்பையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு காட்சியளித்த நடிகை ராஷ்மிகா மந்தனாகவர்ச்சியான சிவப்பு உடையில் கவர்ச்சியாகத் தோன்றி காண்போரின் கண்களில் தனதழகை கவ்வ வைத்துவிட்டார். ராஷ்மிகாவின் இந்த கவர்ச்சி உடை தரிசனம் பார்வையாளர்கள் அனைவரின் இதயங்களையும் அதகளப்படுத்தியது என்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!