துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்

துல்கர் சல்மானுடன் நடிக்கவில்லையே.. நடிகை பூஜா ஹெக்டே புலம்பல்
X

நடிகை பூஜா ஹெக்டே.

Pooja Hegde Latest News - துல்கர் சல்மானுடன் நடித்திருந்தால் வேறு வெவலில் இருந்திருப்போன் என நடிகை பூஜா ஹெக்டே புலம்பி வருகிறார்.

Pooja Hegde Latest News - நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2010ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர். இவர் தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனைத்தொடர்ந்து பெரும்பாலான தெலுங்கு படங்களில் ஆர்வமாக நடித்து வந்தார் நடிகை பூஜா ஹெக்டே. முன்னணி நடிகர்களான பிரபாசுடன் 'ராதே ஷ்யாம்' என்ற படமும், விஜய்யுடன் நடித்த 'பீஸ்ட்' படமும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இதனிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு ஓய்வில் இருந்து வந்தார். அப்போது, சீதா ராமம் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு வந்ததால், அவரால் நடிக்க முடியாமல் போனது. அவருக்கு பதிலாக மிரினல் தாக்கூர் நடித்திருந்தார்.

தற்போது அந்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. படத்தில் கதாநாயகியாக நடித்த மிரினல் தாக்கூருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில், அந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்து இருந்தால் இந்நேரம் வேறு லெவலில் இருந்திருப்பேன் எனவும், அப்படி ஒரு வாய்ப்பு இனி எனக்கு வருவது கடினம் தான் என்று தனது சக நண்பர்களிடம் பூஜா ஹெக்டே புலம்பி வருகிறாராம்..

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!