நடிகை நமீதா கர்ப்பம்: 40வது பிறந்தநாளில் அவரே வெளியிட்ட தகவல்

நடிகை நமீதா கர்ப்பம்: 40வது பிறந்தநாளில் அவரே வெளியிட்ட தகவல்
X

கணவருடன் நடிகை நமீதா. 

பிரபல நடிகை நமீதா, இன்று 40வது பிறந்தநாளை கொண்டாடும் சூழலில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை, படத்துடன் வெளியிட்டுள்ளார்.

தமிழக ரசிகர்களை, ஒருகாலத்தில் தனது கவர்ச்சியால் கட்டிப் போட்டவர், நடிகை நமீதா. மச்சான்ஸ் என்றே ரசிகர்களை அழைப்பார். விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்தார். எனினும், உடல் எடை அதிகரிப்பால், பட வாய்ப்புகள் குறைந்தன. பிக்பாஸ் உள்ளிட்ட டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதனிடையே, 2017-ம் ஆண்டில் வீரேந்திர செளத்ரி என்பவரை, நமீதா மணந்து கொண்டு, இல்ல வாழ்க்கையில் நுழைந்தார். மறுபுறம் பாஜகவில் இணைந்து, தேர்தல் பிரசார மேடைகளில் பேசினார்.


இந்நிலையில், இன்று தனது 40வது பிறந்த நாளில், தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை, நடிகை நமீதா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் "தாய்மை, புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது.

பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, ​​புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது நடிகை நமீதா கர்ப்பமாகி இருப்பது, அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது