ஏப்ரல் மாதம் 2ம் தேதி - நடிகை எம். சரோஜா காலமான தினமின்று

எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை எம். சரோஜா காலமான தினமின்று
தமது கணவர் கே. ஏ. தங்கவேலுவுடன் 1950 முதல் 1970 வரை பல தமிழ்த் திரைப்படங்களில் நடிச்சிருக்கார்.
தன்னுடைய 14-ம் வயதில் இயக்குநர் கே. சுப்பிரமணியம் அவர்களால் எம். ஜி. ஆருடன் சர்வாதிகாரி (திரைப்படம்) மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 300க்கும் கூடுதலான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது குறிப்பிடத்தக்கத் திரைப்படங்களாக கல்யாணப் பரிசு, அறிவாளி, வணங்காமுடி, மருதநாட்டு வீரன், பூலோக ரம்பை, அரசிளங்குமரி, வண்ணக்கிளி, தேன் நிலவு, திருடாதே உள்ளிட்டவை அமைந்தன. இவர் திரைப்படங்கள் மட்டுமின்றி நாடகங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் கே. ஏ. தங்கவேலுவும் சரோஜாவும் ஜோடியாக 50 படங்களுக்கு மேல் நடித்த பிறகு, 1958-ம் ஆண்டு காதல் திருமணம் புரிந்தார்.
சென்னை தியாகராய நகரில் வசித்து வந்த சரோஜா இதே ஏப்ரல் 2, (2012) அன்று தமது 82வது அகவையில் மாரடைப்பால் காலமானார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu