நடிகர் தனுஷுடன் ஜோடி சேரும் நடிகை கிருத்தி ஷெட்டி..!

நடிகர் தனுஷுடன் ஜோடி சேரும் நடிகை கிருத்தி ஷெட்டி..!
X

நடிகை கிருத்தி ஷெட்டி.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை கிருத்தி ஷெட்டி நடிகர் சூர்யாவைத் தொடர்ந்து நடிகர் தனுஷுடன் நாயகியாக நடிக்கிறார்.

நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்குப் பட உலகின் முன்னணி கதாநாயகிகளின் முன் வரிசையை நோக்கி வளர்ந்து வரும் வளர்நிலா நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடித்த 'உப்பெனா' படத்தின் நாயகி இவர்தான். படம் அடைந்த பெருவெற்றியால் இவரது மார்க்கெட் இன்னும் கொஞ்சம் தூக்கலானது.

இயக்குநர் லிங்குசாமி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கிவரும் 'தி வாரியர்' படத்தின் நாயகியாக நடித்து வரும் கிருத்தி ஷெட்டி தமிழில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நாயகனாக நடிக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவலால் நடிகை கிருத்தி ஷெட்டியின் ரசிகர்கள் மகிழ்ச்சித் துள்ளலில் உள்ளனர். ''தமிழில் நடிகர் சூர்யா, நடிகர் தனுஷ் என அடுத்தடுத்து முன்னணி நாயகர்களின் படங்களில் நாயகியாக நடிப்பது பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது'' என புன்னகைத்து பொங்குகிறார் நடிகை கிருத்திகா ஷெட்டி.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!