அறுவை சிகிச்சைக்கு பிறகு படப்பிடிப்பு சென்றுள்ளதாக நடிகை குஷ்பு தகவல்

அறுவை சிகிச்சைக்கு பிறகு படப்பிடிப்பு சென்றுள்ளதாக நடிகை குஷ்பு புகைப்படம் பகிர்ந்துள்ளார்.
நடிகை குஷ்பு நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் படத்தைப் பகிர்ந்து குணமாகி வருவதாக தெரிவித்தார். இது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ள அவர், ''அறுவை சிகிச்சைக்கு பிறகு மைசூரில் இருக்கிறேன். விரைவில் குணமாக வேலையே சிறந்த மருந்து என்று குறிப்பிடுள்ளார். இந்த நிலையில் அவர் பூரண குணமடைய ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை குஷ்பு தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்தத் தொடருக்கு அவர் தான் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனது அவ்னி கிரியேஷன்ஸ் சார்பாக படங்களைத் தயாரித்துவரும் அவர் தற்போது, சுந்தர்.சி மற்றும் ஜெய் இணைந்து நடித்துள்ள 'பட்டாம்பூச்சி' என்ற படத்தை தயாரித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu