திமுக.வில் கீர்த்தி சுரேஷ்! யாருய்யா இத கொளுத்தி போட்டது?

திமுக.வில் கீர்த்தி சுரேஷ்! யாருய்யா இத கொளுத்தி போட்டது?
X
மாமன்னன் திரைப்படத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்திருக்கிறார்.

திமுகவில் நடிகை கீர்த்தி சுரேஷ் சேர உள்ளதாகவும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு திமுக சார்பில் சீட் கொடுக்கப்படவுள்ளது எனவும் போகிற போக்கில் புரளியைக் கிளப்பி விட்டு செல்கிறார்கள். இம்முறை கீர்த்தி சுரேஷ் சேர இருப்பது திமுகவில்.

இப்போதுதான் கீர்த்தி சுரேஷ் பாஜகவில் இணையப் போகிறார் என்கிற புரளி ஓரளவுக்கு அடங்கி போய் இருக்கிறது. இந்நிலையில் திமுகவில் இணைகிறார் என்கிற தகவல் பரவி வருகிறது. வரும் நாடாளு மன்ற தேர்தலில் அவரது சொந்த தொகுதியான நாகர்கோவில் தொகுதியில் திமுக சார்பில் நிற்கப் போகிறார் என்றும் புரளி கிளம்பியிருக்கிறது.

அரசியலைத் தொடர்ந்து வருபவர்களுக்கு இது புரளிதான் என்பது நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் கீர்த்தி சுரேஷ் முன்னதாக பாஜகவில் இணைய இருப்பதாகவும் பேச்சு கிளம்பியது. இதுபோன்ற புரளிகளை கிளப்பி விடுவது யார் என்றும், ஒவ்வொரு முறையும் அவர்களின் தரப்பிலிருந்து யாரோ ஒருவர் மறுப்பு தெரிவிக்க வேண்டுமா என நொந்துள்ளனர் கீர்த்தி சுரேஷின் குடும்பத்தினர்.

பாஜகவில் இணைய இருக்கிறார், திமுகவில் இணைய இருக்கிறார், காதலரை மணக்க இருக்கிறார் என கீர்த்தி சுரேஷை சுற்றி பல புரளிகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இப்போதைய புரளிக்கு காரணம் அவர் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம்தான்.

மாமன்னன் திரைப்படத்தில் அவர் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவராக, உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்திருக்கிறார். இதனால் பட புரமோசனுக்காக உதயநிதி ஸ்டாலினுடன் சேர்ந்து பல மீடியாக்களுக்கும் பேட்டி அளித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இதனாலேயே அவர் திமுகவில் இணைவதாக புரளியைக் கிளப்பி இருக்கிறார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!