நடிகை காஜல் பசுபதி சுரீர் பதில்..!

நடிகை காஜல் பசுபதி சுரீர் பதில்..!
X

நடிகை காஜல் பசுபதி. 

நடிகை மகாலட்சுமி திருமணம் குறித்த நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு நடிகை காஜல் பசுபதி பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை மகாலட்சுமி, பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரன் சந்திரசேகரனை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. ஒரு நெட்டிசன் 'கிளியை வளர்த்து பன்னிகிட்ட கொடுத்தாங்க, பணம் பண்ற வேலை' என்று பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவிற்கு பிக்பாஸ் நடிகை காஜல் பசுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். "நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்தாலும் நயன்தாராதான் தப்புனு சொல்லுவீங்க, மஹா ரவியை திருமணம் செய்தாலும் மஹாதான் தப்புனு சொல்றீங்க. என்ன ஒரு ஆம்பள புத்தி" என்று அந்த நெட்டிசனை வெளுத்துள்ளார். அவருடைய இந்தப் பதிவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்தநிலையில், தங்களின் திடீர் திருமணம் குறித்து தாறுமாறான விமர்சனங்களை இணையத்தில் பரவியதை அடுத்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு, மகாலட்சுமியும் ரவீந்திரனும் பேட்டி அளித்தனர். அப்பேட்டியில், "நாங்கள் இருவரும் இரண்டு வருடமாக காதலித்து வருகிறோம், நிதானமாக யோசித்துத்தான் திருமணம் செய்து கொண்டோம் எந்தக் கட்டாயத்தின் பேரிலும் திருமணம் நடக்கவில்லை" என்று எல்லோருடைய வாய்க்கும் பூட்டுப்போட்டதுபோல் நெத்தியடியாகக் கூறியுள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!