'இந்தியன் 2' படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால் (பைல் படம்).
Kajal Aggarwal Indian 2 update-லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படம் உருவானது. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியன் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து கொரோனா, லாக்டவுன் என பல காரணங்களால் படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலேயே இருந்தன. இதனால் தனது அடுத்தடுத்த படங்கள் பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டார் ஷங்கர்.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை இயக்க இயக்குனர் ஷங்கருக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு துவங்கும் என கூறப்படுகிறது.
இந்தப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து காஜல் இந்தப்படத்தில் இருந்து விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாகவும் இணையத்தில் செய்திகள் பரவியது. இந்நிலையில் இந்த தகவலை மறுத்துள்ளார் நடிகை காஜல் அகர்வால்.
Kajal Aggarwal Indian 2 update-தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடிய காஜல் அகர்வால், தான் 'இந்தியன் 2' படத்திலிருந்து விலக போவதாக பரவிய வதந்திகளை மறுத்துள்ளார் காஜல், நாங்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி இந்தியன் 2 ஷுட்டிங்கை மீண்டும் துவங்க போகிறோம் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu