பழம்பெரும் நடிகை ஜெயந்தி பெங்களூர் மருத்துவமனையில் காலமானார்
பழம்பெரும் நடிகை ஜெயந்தி
கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்த நடிகை ஜெயந்தி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் காலமானார்.
கன்னட திரையுலகில் பழம்பெரும் நடிகையாக இருந்தவர் ஜெயந்தி. இவர், கன்னடம் தவிர தமிழ், மலையாளம், இந்தி, மராட்டி மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட நடிகர் டாக்டர் ராஜ்குமாருடன் மட்டும் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடிகை ஜெயந்தி நடித்து பிரபலமானவர்.
ஜெயந்தி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். எதிர்நீச்சல், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர். மிஸ் லீலாவதி என்ற கன்னட படத்தில் சிறுவயது பெண்ணாக சிறப்பாக நடித்து தேசியவிருது பெற்றார். தனது சிறப்பான நடிப்புக்காக 7 முறை கர்நாடக அரசின் விருதுகளை வென்றுள்ளார்.
தனது மகன் கிருஷ்ணகுமாருடன் பெங்களூருவில் வசித்து வந்த அவர், கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்தார். பெங்களூருவை சேர்ந்த ஜெயந்தி மறைவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu