எப்.ஐ.ஆர். நகல் வாங்குவதற்காக காஞ்சிபுரம் எஸ்.பி அலுவலகத்திற்கு வந்த நடிகை கௌதமி
பிரபல நடிகை கௌதமி இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு வந்தார்.
தன்னுடைய நிலம் மோசடி செய்யப்பட்ட விவகாரம் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் நடிகை கௌதமி. செய்தியாளர்கள் வந்ததை அறிந்து உடனடியாக நடிகை வெளியேறியதால் எப்.ஐ.ஆர். நகல் பெற்று செல்ல மறந்தார்.
பிரபல தமிழ் திரைப்பட நடிகர்களான ரஜினிகாந்த், கமலஹாசன் , விஜயகாந்த் பிரபு உள்ளிட்ட பிரபலங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கௌதமி.
அவர் சினிமாவில் நடித்து வந்த காலத்தில் பெற்ற ஊதியங்களை பிற்காலத் தேவைகளுக்காக பல்வேறு இடங்களில் நிலம் வாங்கி முதலீடு செய்து இருந்தார்.
இந்நிலையில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக கடந்த மாதத்தில் இருந்து பரபரப்பு உண்டாகி இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு கூட இல்லாமல் தன்னை அலைக்கழிப்பதாகவும் இதற்கு பா.ஜ.க. கட்சி துணை செய்யவில்லை எனவும் கூறி அதிலிருந்து விலகினார்.
இந்நிலையில் கடந்த இரண்டாம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் அவரது நிலத்தை மோசடி செய்ததாக அவரது மேலாளர் அழகப்பன் , அவரது மனைவி நாச்சால் உள்ளிட்ட ஆறு பேர் மீது ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று எஃப் .ஐ. ஆர். நகல் பெற தனது வழக்கறிஞர் மற்றும் சகோதரியுடன் நடிகை கௌதமி காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.
இதை அறிந்து செய்தியாளர்கள் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்றதை அறிந்து உடனடியாக அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றார்.
இதனிடையே எஃப்.ஐ.ஆர் நகல் அவருக்கு வழங்க தயார் நிலையில் இருந்த போது அதை கூட பெற்றுக் கொள்ளாமல் அவசர அவசரமாக சென்ற நிலையில் அவரைத் தேடிச் சென்று காவலர்கள் எப்ஐஆர் நகலை அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu